NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!!

     மரணத்திற்குப் பின்  வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. 
 
     மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் போது மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.என்கிறார்.
இருந்தாலும் ஒவ்வோரு நாட்டிலும் மரணத்திற்கு பின் என்ன என்பதற்கான் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த 2011 ஆம் வருடம். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் இதய நோய் காரணமாக ஒரு நோயாளியை ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சை பார்த்து கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.

அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்களில் முயற்சியால் அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் மயக்கத்திலிருந்து அவர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கேட்பவர்களை நடுநடுங்க வைத்தது.

அதாவது, மாரடைப்பு ஏற்பட்டவுடன் தன் உடலிலிருந்து தான் வெளியில் வந்ததாகவும், இந்த அறையின் ஓரத்தில் நின்று கொண்டு தனக்கு வழுக்கைத்தலை மருத்துவர் ஒருவர் சிக்கிச்சையளிப்பதை தானே பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

அவர் வீட்டிலிருந்து மயக்கநிலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் எப்படி அவர் சரியாக மருத்துவரை பற்றி கூறியுள்ளார் பார்த்தீர்களா? அதான் ஆச்சரியம்!

இன்னொரு சம்பவம், கடந்த 1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு வந்து இதயதுடிப்பு நின்றவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இருந்தபோது, நடந்ததை பற்றி அவரே கூறுகிறார்

என் உடலைவிட்டு நான் அப்படியே மேலே போனேன், மருத்துவமனை மொட்டை மாடியில் ஒரு செருப்பும், பூக்களும் இருப்பது எனக்கு தெரிந்தது என அவர் கூறினார். அங்கு போய் மருத்துவர்கள் பார்த்த போது உண்மையிலேயே அங்கு அந்த பொருட்கள் இருந்துள்ளது.

இது போல பல உண்மை சம்பவங்கள் உலகெங்கிலும் இங்கொன்றுமாக, அங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இது சம்மந்தமாக மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த 101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப் பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம் கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர் இயங்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் விலங்குகள் அல்லது செடிகொடிகளை பார்த்தல், அவர்கள் அறைகளில் நடப்பது தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மறுபடி நடத்தல் போன்ற பல விஷயங்கள்  தாங்கள் உணர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்படியான பல தனி மனித உதாரணங்கள், பல மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், இறந்தவர்கள் அதன் பின்னர் என்ன ஆவார்கள் என்பதை முற்றிலுமாக யாராலும் கணிக்கமுடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive