NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெளிநாட்டு அச்சகங்களில் ரூபாய் அச்சிட திட்டம்?

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், நாடு முழுவதும்,
கடுமையான பணத் தட்டுப்பாடு நிலவுவதால், *ரூபாய் நோட்டுகளை வெளிநாடுகளில் அச்சிடுவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.*
கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மக்கள், வங்கிகளில் பணம் பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. *அரசு அச்சகங்களில், புதிய நோட்டுகள் அச்சிடுவது புழக்கத்திற்கு வர, சில மாதங்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.* இம்மாதம், 30ம் தேதியுடன், பழைய, 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம் முடிகிறது.
ஐரோப்பிய நாடுகள் :
இந்நிலையில், பணத் தட்டுப்பாட்டை போக்க, ரூபாய் நோட்டுகளை வெளிநாடுகளில் அச்சிட்டு பெறுவது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் உள்ள *இந்திய துாதரக அதிகாரிகள், ரூபாய் நோட்டுகளை அச்சிடக் கூடிய* *நிறுவனங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது*
*ஜெர்மனியின், ஜிய்செக் அண்ட் டெவ்ரியன்ட், பிரான்சின், பிரான்காய்ஸ் சார்ல்ஸ் ஒபெர்துர் பிடுசியாய்ரி உள்ளிட்ட அச்சக நிறுவனங்களை, இந்திய துாதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டதாக தெரிகிறது* இந்த நிறுவனங்கள், *கனடா, பிரிட்டன், மலேஷியா, இந்தோனேஷியா, வெனிசுலா* உள்ளிட்ட பல நாடுகளின் கரன்சிகளை அச்சிட்டு தருகின்றன.
*ஆலோசனை :*
சமீபத்தில் டில்லியில் நடந்த மத்திய அமைச்சகங்களின் செயலர்கள் இடையிலான கூட்டத்தில், தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் வகையில் ரூபாய் நோட்டுகளை, வெளிநாடுகளில் உள்ள அச்சகங்களில் அச்சிட்டு பெற வேண்டும் என்ற ஆலோசனை கூறப்பட்டது.
*இதற்கு முன்*
   இந்தியாவின் கரன்சி நோட்டுகள், இதற்கு முன்பும், வெளிநாடுகளில் உள்ள அச்சகங்களில் அச்சிட்டு பெறப்பட்டுள்ளன. கடந்த, 1997 - 98ல், *ஜெர்மன், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன்* நாடுகளை சேர்ந்த, அச்சக நிறுவனங்களிடம் இருந்து ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு பெறப்பட்டன.
அரசுக்கு சொந்தமான நான்கு அச்சகங்களில், தொடர்ச்சியாக ரூபாய் நோட்டுகள் அச்சிட்டாலும், பணத் தட்டுப்பாடு மேலும் சில காலம் தொடரும்; இயல்பு நிலை திரும்ப, *ஐந்து மாதங்கள் ஆகும்.*
-பி.கே.பிஸ்வாஸ், பொதுச்செயலர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive