NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கதர் துணியில் சீருடை: ஆணைய கோரிக்கை கிடப்பில்!

      பள்ளி மாணவர் சீருடையை, கதராடையாக வழங்க வேண்டும்' என்ற, கதர் கிராம தொழில்கள் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை, தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
 
     மத்திய அரசின் கதர் கிராம தொழில்கள் ஆணையம், நாடு முழுவதும் கதர் ஆடைகள் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்; அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒருநாள் கதர் ஆடை அணிய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, கதர் கிராம தொழில்கள் ஆணையம் வேண்டுகோள் விடுத்தது. 

இது தொடர்பாக, மும்பையில் உள்ள ஆணைய இயக்குனர், தமிழக கல்வித்துறை செயலருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அக்கோரிக்கையை, தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.இது குறித்து, கதர் கிராம தொழில்கள் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: கதர் விற்பனையை மேம்படுத்த ரயில்வே துறை, 'ஏர் இந்தியா' விமான பணிப் பெண்கள் கதர் சீருடை அணியும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பிரபல ஆடை விற்பனை நிறுவனங்களுடன், கதர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒருநாள், அரசு ஊழியர்கள் கதராடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பள்ளி மாணவர்கள் கதர் சீருடை அணிய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நடைமுறையை தமிழகத்திலும் செயல்படுத்தக் கோரி, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் தமிழக அரசை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive