NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்திய அரசியலில் பெரிய வெற்றிடம்: மோடி இரங்கல்

         முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
 
       அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை நான் என்றும் சந்தோஷமாக நினைவு கூறுவேன். மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த ஜெயலலிதா ஏழைகளின் நலனுக்காவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர்.

ஜனாதிபதி: தமிழக வளர்ச்சிக்காக ஜெயலலிதா ஆற்றிய பங்கு நீண்டகாலம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும். 
சோனியா: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்ட போது எந்த அளவிற்கு நோயை எதிர்த்து போராடினாரோ அதே அளவு போராட்ட குணத்துடன் தனது வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார். 
ராகுல் : சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் ஜெயலலிதாவின் பெண்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. ஜெ., மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது
ம.பி., முதல்வர் சவுகான்: முதல்வர் ஜெயலலிதா மறைவு அறிந்து மிகுந்த துயரடைந்தேன் தமிழக மக்களுக்கு எங்களுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். 
பொன்.ராதாகிருஷ்ணன்: தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் தனக்கு சரி என்று பட்டதை தீர்க்கமாவும் நின்று சாதித்தவர், துணிச்சலான அரசியல் தலைவர் என அறியப்பட்டவர் 
ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு: மக்களுக்காக உண்மையாக உழைத்த தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா எப்பொழுதும் நம்நினைவில் இருப்பார். 
டில்லி முதல்வர் கெஜ்ரிவால்: ஜெயலலிதா ஒரு செல்வாக்குள்ள தலைவர் சாதாரண மக்களின் தலைவர் 
ராஜ்நாத்சிங்: இந்திய அரசியலில் மிகவும் முக்கிய இடத்தை வகித்தவர் ஜெயலலிதா அவருடைய மறைவு சமுதாய மக்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும்
மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு: ஜெயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவால்: ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
மம்தா: வலுவான, திறமையான மக்களின் நண்பனாக கவர்ந்திருக்கும் தலைவர் அவரது இழப்பு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive