NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Rasipalan 4.12.2016

மேஷம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள்.
வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மிதுனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சிம்மம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கன்னி
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப் பச்சை
துலாம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைக் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
விருச்சிகம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தனுசு
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்
மகரம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கும்பம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மீனம்
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive