Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

மெரினாவில் பிப்.12வரை 144 தடை : போலீஸ் கமிஷனர்

            சென்னை மெரினாவில் இன்று நள்ளிரவு முதல் பிப். 12ம் தேதி வரை 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து காவல் ஆணையர் ஜார்ஜ் கூறியிருப்பதாவது:

            சென்னை மெரினாவில் நாளை (29ம் தேதி) மீண்டும் இளைஞர் கூட சமூக வலைதளங்களில் பல்வேறு அமைப்பு மற்றும் அமைப்பு சாராதவர்கள் சிலர் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதையடுத்து மெரினாவில் இன்று நள்ளிரவு முதல் பிப்.,12ம் தேதி வரை மெரினாவில் ஆர்பாட்டம், போராட்டம், மனிதசங்கிலி போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போல் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நடை பயிற்சி, சுற்றுலா, குடும்பத்துடன் பொழுது போக்க வருபவர்களுக்கு எந்த வித தடையும் கிடையாது. இத்தகவலை கூடுதல் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading