NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் ரேஷனில் பொருள் வாங்கிய ஆந்திர மாநில கூலித்தொழிலாளிக்கு 1 லட்சம் பரிசு.

💳 திருமலை: மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும்,
டிஜிட்டல் பரிமாற்றத்தை அதிகரிக்கவும் குலுக்கல் முறையில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் செய்பவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகை வழங்கும் ‘லக்கி கிரஹக் யோஜ்னா’ என்ற பெயரில் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இந்நிலையில்,


💳 ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், சிட்டிகுண்டா பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரமணம்மா டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் ரேஷன் பொருட்களை வாங்கியதற்காக மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ₹1 லட்சம் பரிசு தொகை பெற்றுள்ளார்.

💳 இதுகுறித்து, கிருஷ்ணா மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

💳 ‘கூலித்தொழிலாளி ரமணம்மா கடந்த 6ம் தேதி சிட்டிகுண்டா பகுதியில் உள்ள ரேஷன் கடையில் 66க்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு மூலமாக டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் பணம் செலுத்தி, பொருட்களை பெற்றுக்கொண்டார்.

💳 தொடர்ந்து, மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ரமணம்மா தேர்வு செய்யப்பட்டார்.

💳 அவரது வங்கிக் கணக்கில் மத்திய அரசு சார்பில் 1 லட்சம் பரிசு தொகை செலுத்தப்பட்டது.

💳 இதேபோல் வாரந்தோறும் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive