Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வருட பலன் 2017 - கும்பம்

கும்பம்
மற்றவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுபவர்களே! உங்களுடைய ராசிக்கு 3-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள்.
எதிர்பார்த்த வேலைகள் முடிவடையும். சோம்பல், சலிப்பு, எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்து ஏமாந்து போன தொகையும் கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் நீங்கள் ஆதாயமடைவீர்கள். தடுமாற்றங்கள் நீங்கும். எதிர்த்தவர்களும் அடங்குவார்கள். பழைய கடனை பைசல் செய்வதற்கு தீவிரமாக யோசிப்பீர்கள். உங்களுடைய ராசிக்கு 6-ல் குரு மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கொஞ்சம் பணப்பற்றாக்குறை இருக்கும். சின்ன சின்ன காரியங்களையும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சிலர் உங்களை அவதூறாகப் பேசுவார்கள். சிலர் உங்களுக்கு கோபம் வரும்படி உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. கடன் பிரச்னை அதிகமாகிறதே என்றெல்லாம் சில நேரம் யோசிப்பீர்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் குடும்ப வருமானம் உயரும். ஆழ்மனதில் இருந்து வந்த கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். மனநிம்மதியும் உண்டாகும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். புது வேலைக் கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உறவினர், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டீர்களே! அந்த நிலை மாறும். மனதில் ஒரு சாந்தமான சூழ்நிலை உருவாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். ராசிக்கு 8-வது வீட்டில் நிற்பதால் அலைச்சல் ஒருபக்கம் இருந்துக் கொண்டுதான் இருக்கும். திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் இருக்கும். வேற்றுமொழிப் பேசுபவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களிடம் கவனமாகப் பழகுங்கள். வளைதளத்தில் வரக்கூடிய செய்திகளையும், கடிதங்களையும் நம்பி ஏமாறாதீர்கள். 2-ல் கேது நிற்பதால் லேசாக பார்வைக் கோளாறு வரும். கண்ணில் அடிப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தை இயக்கும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். கண்ணில் பெரிய தூசு விழாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். கண் எரிச்சல், கண் உருத்தல் இருந்தால் கை வைத்தியம் பார்க்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அவசரப்பட்டு சிலரிடம் அந்தரங்க விஷயங்களையெல்லாம் சொல்லாதீர்கள். உங்களுடைய ராசிக்கு 12-வது வீட்டில் சுக்ரன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதரிக்கு திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். செவ்வாய் 12-ல் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சொத்துகள் வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. சொத்துக்களை விற்கும் போதும் ஏமாந்துவிடாதீர்கள். சிலர் சின்ன தொகையை முன்பணமாக கொடுத்துவிட்டு ஆறு மாதம், ஏழு மாதம் கழித்து மீதித் தொகை தராமல் இழுத்தடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். வியாபாரத்தில் ஏப்ரல் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். ஜீலை மாதம் முதல் புது ஆடர்கள், ஏஜென்சிகள் எடுப்பீர்கள். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் 10-ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உதவியும் கிடைக்கும். வெளிமாநிலத்தில், அயல் நாட்டிலிருப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து விரிவுப்படுத்த வாய்ப்பிருக்கிறது. புகழ் பெற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். கடையை நல்ல இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அமைதி உண்டாகும். உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஜீன் மாதத்திலிருந்து நிம்மதி பிறக்கும். இதுநாள் வரைப்பட்ட கஷ்டங்களெல்லாம் நீங்கும். புது சலுகைகளும் கிடைக்கும். புது அதிகாரி உங்களைப் பாராட்டுவார். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையும் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading