Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வருட பலன் 2017 - தனுசு

தனுசு
பிரச்னையென வந்து விட்டால் சட்டம் பேசுபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-வது வீட்டில் புதன், சுக்ரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்த 2015ம் ஆண்டு பிறப்பதால் எல்லா வகையிலும் நீங்கள் முன்னேறுவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிக்கல்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அதைத் தீர்ப்பீர்கள். இதமானப் பேச்சால் முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். பணவரவு பலவகையிலும் உண்டு ஆனால் செலவினங்களும் கட்டுக்கடங்காமல் போகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். வழக்குகள் பேசி தீர்க்க வழி வகை கிடைக்கும். மனஇறுக்கங்கள் குறையும். வீட்டில் கூடுதல் தளம் அமைப்பீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நின்றுக் கொண்டிருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர், நண்பர்களுடன் இருந்த உரசல் போக்கு நீங்கும். புதிய பாதையில் பயணிப்பீர்கள். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்துக் கிடக்கும் போது இந்த 2015-ம் ஆண்டு பிறப்பதால் அலைச்சல், செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பிள்ளைகளால் மனவருத்தங்கள் வந்துப் போகும். ஆனால் ஜீலை மாதம் முதல் உங்கள் ராசிநாதன் குரு 9ம் வீட்டில் வந்தமர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவும் அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். ஆனால் நட்பு வட்டம் விரிவடையும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். லேசாக முதுகு வலி, மூட்டு வலி வரும். சொமானக் கோளாறு, மலச்சிக்கல்களும் வரக்கூடும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கவனக்குறைவாலும் சிலவற்றை இழந்துவிடாதீர்கள். பழைய மின்னணு, மின்சார சாதனங்களை விற்று விட்டு புதிதாக வாங்குவீர்கள். வாகன வசதி உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் கேது நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். கேஸ் சிலிண்டருக்கு பயன்படுத்தும் டியூப் பழுதாகியிருந்தால் உடனே மாற்றுங்கள். எண்ணெய் பதார்த்தங்கள் செய்துக் கொண்டிருக்கும் போது அலைப்பேசியை பயன்படுத்த வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். ஜீலை மாதத்திலிருந்து புகழ் பெற்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு வகைகளாலும் ஆதாயமடைவீர்கள். புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் ஜீலை மாதம் முதல் குறையும். உத்யோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி புரிந்துக் கொள்வார். மூத்த அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஜீலை மாதம் முதல் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு வந்தமர்வதால் புது வேலைக் கிடைக்கும். எதிர்ப்புகளும் நீங்கும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சம்பள பாக்கி கைக்கு வரும். புது பொறுப்புகள் தேடி வரும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலும் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மாணவ-மாணவிகளே! மந்தம், மறதி வந்து நீங்கும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எதையும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். சமூக அறிவியல், கணிதப் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கன்னிப் பெண்களே! மனக்குழப்பங்கள் நீங்கும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading