Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வருட பலன் 2017 - மகரம்

மகரம்
நெருக்கடி நேரத்திலும் அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குபவர்களே! உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் தைரியம் பிறக்கும்.
குழப்ப நிலையிலிருந்து விடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். புதிய வாகனமும் அமையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய தைரிய ஸ்தானத்தில் கேது நிற்பதால் இந்த 2015-ம் ஆண்டில் பெரிய பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கோபம் குறையும். சாதுர்யமாகப் பேசி பல காரியங்களையும் முடிப்பீர்கள். உங்களின் யோகாதிபதியான சுக்ரன் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு பரபரப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் புது வீடு கட்டி கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய்வீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். உங்களின் பாக்யாதிபதியான புதனும், சுக்ரனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உங்களுடைய ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். வேலைச்சுமையும் கூடும். தூக்கம் குறையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்களும், செலவுகளும் இருக்கும். ஜீன் மாதம் வரை உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டிருப்பதால் குழந்தை பாக்யம் உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன திருமணம் சீரும், சிறப்புமாக நடைபெறும். மகனுக்கு உயர்கல்வி நீங்கள் எதிர்பார்த்த கல்வி பிரிவில், விரும்பிய நிறுவனத்தில் அமையும். அவருக்கு நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். மகளுக்கும் நல்ல வரன் அமையும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். ஜீலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்யோகம் அல்லது உயர்கல்வியின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டு பிரிவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்பி குடும்ப விஷயங்களையோ, சொந்த விஷயங்களையோ பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டு. ஆன்மிக பயணங்களும் சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அயல்நாட்டு பயணமும் உண்டு. அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களுடைய ராசிக்கு 12-ல் வீட்டில் சூரியன் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கொஞ்சம் தடைப்பட்டு முடிவடையும். குறிப்பாக அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அரசியல்வாதிகளுடன் கவனமாகப் பழகுங்கள். ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அவசர முடிவுகள் வேண்டாம். சில நேரங்களில் சேமிப்புகள் கரையும். பின்னர் பணவரவு உண்டாகும். சொத்து வாங்குவது, நகைகள் வாங்குவது பொருட்டு சேமிப்புகளையெல்லாம் நீங்கள் முதலில் இழக்க நேரிடும். நகை அல்லது நிலம், சொத்தில் முதலீடு செய்வீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஹோட்டல், தங்கும் விடுதி, கன்ஸ்டக்ஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். விளம்பர யுக்திகளை கையாண்டு உங்களுடைய நிறுவனத்தை பிரபலமாக்குவீர்கள். போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் பணிந்துப் போவார்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் குரு 8-ல் சென்று மறைவதால் அதுமுதல் போட்டிகள் அதிகமாகும். அவ்வப்போது பணப்பற்றாக்குறை வந்தாலும் சாமர்த்தியமாக சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி உண்டு. உயரதிகாரிகள் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சிலருக்கு வேறு நல்ல வாய்ப்புகளும் கூடி வரும். வெளிமாநிலம், வெளிநாட்டு தொடர்புகளும் கிடைக்கும

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading