Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வருட பலன் 2017 - துலாம்

துலாம்
கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்டவர்களே! உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மனைவி உங்களைப் புரிந்துக் கொள்ள ஆரம்பிப்பார். உங்களுடைய கடின உழைப்பையும், வெள்ளை மனதையும் இனிமேல் மனைவி புரிந்துக் கொள்வார். உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டேயிருப்பதால் அலர்ஜி, இன்பென்ஷனிலிருந்து விடுபடுவீர்கள். பல நேரங்களில் சோர்வாகவும், களைப்பாகவும் காணப்பட்டீர்களே! அந்த நிலை மாறும். இனி உற்சாகம் பிறக்கும். தைரியமும் கூடும். சவாலான காரியங்களைக் கூட எடுத்து செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன், உங்கள் பாக்யாதிபதியான புதனும் 4-ல் நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கி விட்டு திருப்பித் தர முடியாமல் திணறினீர்களே! அந்த தொகைகளையும் தந்து உங்களுடைய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். உள்மனதில் இருந்து வந்த குழப்பங்களும், தாழ்வுமனப்பான்மையும் நீங்கும். ஜீன் மாதம் வரை உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டிலேயே குரு நிற்பதால் அதுவரை சிறுசிறு அவமானங்களும், மன உளைச்சல்களும், எதிர்காலம் பற்றிய பயமும் இருக்கும். உங்களைப் பற்றி அவ்வப்போது நீங்கள் தாழ்த்திக் கொள்வீர்கள். சிலர் உங்களை குறைத்து மதிப்பிடுவார்கள். செலவுகளும் அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்களாலும் உடல் நிலை பாதிக்கும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் உடனுக்குடன் செலுத்துங்கள். சொத்து வரியை மறவாமல் செலுத்துங்கள். உங்கள் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம் பாதுகாப்பாக எடுத்து வையுங்கள். புறநகர் பகுதியில் வீட்டு மனை, காலி மனை வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது சென்று அதை பார்த்து வருவது நல்லது. சிலர் அதை ஆக்ரமிக்கக் கூடும். ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கணவன்-மனைவிக்குள் இருக்கும் கசப்புணர்வுகளை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பண விஷயத்திலும் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட வேண்டாம். பல், கண், காது வலி வந்துப் போகும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். லேசாக தலைச்சுற்றல் வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் ஈடுபடாதீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் தூக்கம் குறையும். திடீர் செலவுகள் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும். 6-ல் கேது நிற்பதால் வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் அடங்குவார்கள். எதிர்ப்புகள் குறையும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி, வகைப் பிறக்கும். சமுதாயத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அந்தஸ்து ஒருபடி உயரும். ஷேர் மூலமாக பணம் வரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுப்படுத்துவீர்கள். பண உதவியும் கிட்டும். பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். செல்வாக்குமிக்கவர்கள் பங்குதாரர்களாக வந்து சேருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, எலக்ட்ரானிக்ஸ், கன்ஸ்டக்ஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். தொந்தரவு தந்த அனுபவமில்ல வேலையாட்களை நீக்கிவிட்டு நல்லவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஜீலை மாதத்திலிருந்து பற்று வரவு உயரும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் நல்ல பெயர் இருக்காது. உங்களுடைய உழைப்பு மேலதிகாரியின் கவனத்திற்கு செல்லாமலேயே இருக்கும். இடையில் இருக்கும் அதிகாரிகள் உங்களை பகடைக் காயாக உருட்டுவார்கள். உங்களிடம் அதிக வேலை வாங்குவார்கள். ஆனால் மூத்த அதிகாரிகள் உங்களிடம் பாசமாக நடந்துக் கொள்வார்கள். ஜீன் மாதம் வரை உத்யோகஸ்தானமான 10-ம் வீட்டிலேயே குருபகவான் நிற்பதால் அதுவரை அலைச்சலும், சின்ன சின்ன அவமானங்களும், வேலை இழப்பும் ஏற்படும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading