NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4,500 பேரை வெளியேற்றிய HDFC Bank

         ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கடந்த 2016ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 4,500 ஊழியர்களை பணநீக்கம் செய்துள்ளது. 
 
        மேலும் வரும் காலங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையையும் குறைத்துக்கொள்ள அவ்வங்கி முடிவெடுத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி. நடப்பு 2016-17 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) ரூ.3,800 கோடி லாபம் பெற்றிருந்தது. இது முந்தையை ஆண்டின் இதே காலாண்டைவிட 15 சதவிகித உயர்வு என்றாலும், கடந்த 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஹெச்.டி.எஃப்.சி. வங்கி அடைந்த குறைந்தபட்ச லாபம் இதுவாகும். எனவே, செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ள இவ்வங்கி பல மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் எந்தவொரு வங்கியும் மேற்கொள்ளாத நடவடிக்கையாக ஒரே காலாண்டில் சுமார் 4,500 ஊழியர்களை வெளியேற்றியுள்ளது. இதில் தானாக வெளியேறிய ஊழியர்களும் அடக்கம்.

நவம்பர் மாதம் வெளியான நோட்டுகள் மீதான தடை அறிவிப்பின் மூலம் நாட்டில் இயல்பான வளர்ச்சி அளவை எட்ட இன்னும் பல மாதங்கள் ஆகும் எனக் கணித்துள்ள ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு தனது வங்கி செயல்பாட்டில் பல பணிகளை ஆட்டோமேஷன் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் வாயிலாக ஊழியர்களின் தேவையும், நிறுவனத்தின் செலவினங்களும் குறைந்துவிடும் எனக் கணித்துள்ளது ஹெச்.டி.எஃப்.சி வங்கி.

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 95,002 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை, அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 90,421 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை ஒரே காலாண்டில் 5 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive