NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

60 லட்சம் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன!!!

         அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.விலை இல்லா பொருட்கள்



அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை, காலணிகள் உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா பொருட்கள் தமிழக அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க அரசு முடிவு எடுத்து, அதன் காரணமாக காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்களை முதல் பருவ பாட புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான பாடப்புத்தகங்களை 2–வது பருவ பாடப்புத்தகங்கள் என்றும் அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரை 3–ம் பருவ புத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.அவ்வாறு அந்தந்த பருவத்திற்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை 1–ம் வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கும் பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே வழங்கப்பட்டு வருகின்றன.பாடப்புத்தகங்கள் வினியோகம்

பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிக்கூடங்கள் திறந்ததும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1–வது முதல் 9–வது வகுப்பு வரை படிக்கும் 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டன. அதற்கான பாட நூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக தலைவர் மைதிலி ராஜேந்திரன் உத்தரவுப்படி செயலாளர் கார்மேகம் அச்சடித்து அந்தந்த மாவடட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பினார்கள். இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஏற்பாட்டில் அனைத்து பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு நேற்றே பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive