NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

படிப்பு... ஐந்தாம் வகுப்பு, வேலை... சி.இ.ஓ, வயது: 94, சம்பளம்... ரூ.21 கோடி!

       ‛படிப்புக்கும், பதவிக்கும் சம்பந்தமே இல்லை. உழைப்பை விட உன்னதம் வேறில்லை’ என நிரூபித்திருக்கிறார் ஒரு முதியவர். ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை, 94 வயதில் ஆண்டுக்கு ரூ.21 கோடி சம்பளம், இன்னமும் சுறுசுறுப்பு என நீள்கிறது, அவரைப் பற்றிய ஆச்சர்யப் பக்கங்கள்.

யார் அவர்?
அவர் பெயர் தர்மபால் குலாதி. எம்.டி.ஹெச் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மசாலா நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்த நிறுவனத்துக்கான விதை அவர் தந்தை மகாஷே சூனி லால் தூவியது.
பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியில் பிறந்தவர் மகாஷே சூனி லால். கடந்த 1919ம் ஆண்டு சியால்கோட்டில் சிறிய அளவிலான மசலாக் கடையைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு டெல்லியில் குடியேறினார். கரோல்பாக் பகுதியில் உள்ள சிறிய அளவில் கடையைத் தொடங்கினர். மசாலா பொருட்களில் சிறந்த தயாரிப்பை மக்களுக்கு வழங்குவதே இந்த நிறுவனத்தின் தாரக மந்திரம்.

மகாஷே சூனி லால் காலத்துக்குப் பின், எம்.டி.ஹெச் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தும் பெரும் பொறுப்பு மகன் தர்மபால் குலாதிக்கு வந்தது. நினைத்ததை விடப் பல மடங்கு தன் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தினார். தற்போது இந்த நிறுவனம் 60 வகையிலான மசாலா பொருட்களைத் தயாரிக்கிறது. டெக்கி மிர்ச்சி, சாத் மசலா, சென்னா மசாலா போன்றவை எம்.டி.எச் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்புகள். இந்த 3 தயாரிப்புகளின் மூலம் மாதம் தோறும் தலா ஒரு கோடி பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. அதுவும் இந்தியாவில் மட்டும். இதுதவிர, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் இந்த மசாலா விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.

இந்த நிறுவனத்தின் தற்போதையை சி.இ.ஓ தர்மபால் குலாதிக்கு வயது 94. இவரது ஆண்டு சம்பளம் ரூ. 21 கோடி. கோத்ரெஜ் சி.இ.ஓ ஆதி கோத்ரெஜ், ஹிந்துஸ்தான் யூனிவர் லிமிடெட் நிறுவனத்தின் சஞ்சீவ் மேத்தா, ஐ.டி.சி தேவேஷ்வர் ஆகியோரை விட தர்மபால் குலாதியின் சம்பளம் அதிகம். விவரம் தெரிந்தவர்கள் இவரை ‛தாதாஜி’ என்று அழைக்கின்றனர். இவரது 6 மகள்களும், மகனும் தொழிற்சாலை நிர்வாகத்தில் முழு மூச்சுடன் தந்தைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு எம்.டி.எச். நிறுவனம் ரூ.924 கோடி லாபம் ஈட்டியது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகம். நிகர லாபம் ரூ.213 கோடி. இந்த நிறுவனத்தில் 80 சதவீத பங்குகள் குலாதியிடம் இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு 15 தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது ரூ.1,500 கோடி சொத்து மதிப்பு கொண்ட ஒரு நிறுவனமான உயர்ந்திருக்கிறது. நாடுமுழுவதும் ஆயிரம் டீலர்களுக்கு மேல் இருக்கின்றனர். எம்.டி.எச் நிறுவனத்துக்கு துபாய் மற்றும் லண்டனிலும் அலுவலகங்கள் உள்ளன. கேரளா, கர்நாடகா மட்டுமல்லாது ஈரான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் கிராம்பு உள்ளிட்ட வாசனைப் பொருட்களை இந்த நிறுவனம் வாங்குகிறது.
மசாலா போன்ற கன்ஸ்யூமர் பொருட்களில் எவரெஸ்ட் பிராண்ட் நிறுவனம் சந்தை மதிப்பில் 13 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அடுத்தததாக எம்.டி.எச் பிராண்ட் 12 சதவீதத்தை வைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்திய மசாலா சந்தையின் மதிப்பு ரூ.13,200 கோடிக்கு உயர்ந்துள்ளது. இது 2015ம் ஆண்டை விட,16 சதவீதம் அதிகம் .

எல்லாம் சரி... குலாதி என்ன படித்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அவர் ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. பாதியிலயே படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார். ஆனால் மிகச்சிறந்த நிர்வாகி. முதுமையிலும் தினமும் தொழிற்சாலைகளுக்கு சென்று தயாரிப்புப் பணிகளை மேற்பார்வையிடுகிறார். தொழிலாளர்களை, டீலர்களை நேரடியாக சந்தித்து உரையாடுகிறார். ஞாயிற்றுக்கிழமை கூட ஓய்வு எடுப்பதில்லை. 60 ஆண்டுகளுக்கு முன், இந்த நிறுவனத்தில் சேர்ந்த குலாதியின் சம்பளத்தின் பெரும் பகுதி எம்.டி.ஹெச் அறக்கட்டளைக்குச் செல்கிறது. இந்த அறக்கட்டளை எம்.டி.எஹெச் என்ற பெயரில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. பல்வேறு தொண்டுகளிலும் ஈடுபட்டு வருகிறது.

உழைப்பை மூலதனமாக வைத்து உயர நினைப்பவர்களுக்கு தர்மபால் குலாதி ஆகச் சிறந்த முன்னுதாரணம்.
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive