NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவிகளின் தற்கொலைக்கு செல்பேசி காரணமா??

படிக்கும் மாணவிகளை தவறாக ஸ்மார்ட்போன்களில் படம் எடுத்து மிரட்டி பாலியலுக்கு வற்புறுத்துவது தற்போது அதிகரித்துள்ளது.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமூக வலைத்தளங்கள் அதிகம் புகழ் பெற ஆரம்பித்ததும் இந்த பிரச்னைகள் இன்னும் அதிகமாகிவிட்டன.

கேரளாவின் திருச்சூரில் வசிப்பவர் தன்யா மேனன். இந்தியாவின் முதல் பெண் சைபர் கிரைம் துப்பறியும் நிபுணர் என்ற பெருமை பெற்றவர். இவர் மாணவிகள் தற்கொலைக்கு மொபைல் போன் தான் காரணம் என எச்சரிக்கிறார்.மாணவிகள் தற்கொலைக்கு காரணமாக இருப்பது மொபைல் போன்கள் தான் என பெண் சைபர் கிரைம் துப்பறியும் நிபுணர் தன்யா மேனன் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை பற்றி வர கூறும் போது 'சமீபத்தில் மூன்று பள்ளி மாணவிகள் கேரளாவில் வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இது தான் நான் விசாரித்த முதல் வழக்கு. மற்றொரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அந்த 3 மாணவிகள் சல்லாபமாக இருந்த புகைப்படங்களை மொபைலில் காட்டி, அவர்களை பாலியலுக்கு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு ஒத்துழைக்காவிட்டால் அவற்றை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். அதனால், குடும்ப மானத்தை காப்பதற்காக மாணவிகள் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.ஸ்மார்ட் போன்களால் மூன்று மாணவிகள் பலியானது மிகுந்த வேதனை அளித்தது. இணையதளம், சமூக வலைதளங்கள், என மொபைல் போனில் ஒளிந்திருக்கும் ஆபத்தும் வக்கிரமும் அதிகம். அவற்றை அறியாமல் இளம் பருவத்தினர் இன்னல்களுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறேன். அதில் அந்தரங்க தகவல்களை பகிர்ந்து பிரச்னைகள் வர நாமே காரணமாகக் கூடாது என்பதை தெளிவாக புரிய வைக்கிறேன். இதுவரை 400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்' எனக் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive