NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கிகளில் பணத் தட்டுப்பாடு தொடர்வதால் சம்பள பணத்தை எடுக்க முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி..

        பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதை மாற்றுவதற்கான காலக் கெடு டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னரும் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் அரசு மற்றும் தனியார்
ஊழியர்கள் தங்கள் சம்பள பணத்தை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் அதிகபட்சமாக ரூ.10,000 மட்டுமே வழங்கப்பட்டது.

அதுவும் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடந்து வாங்கி சென்றனர். இந்நிலையில் டிசம்பர் மாதம் சம்பளம் ஊழியர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
நேற்று புத்தாண்டு என்பதால் விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று அரசு ஊழியர்கள் அனைவரும் தலைமை செயலகம் எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் பணியை யாரும் தொடராமல் நேராக வங்கிகளுக்கு சம்பள பணத்தை எடுக்க சென்றனர். தலைமை செயலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் உள்ளது. இங்கு காலை 9.30 மணி முதல் நீண்ட வரிசையில் அரசு ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் போன்று ரூ.10,000 மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பள பணத்தை வழங்க முடியாது. தொடர்நது இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என தெரிகிறது. இதனால் அரசு பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் மட்டும் 5 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இவை அனைத்தும் செயல்படவில்லை. கடந்த 50 நாட்களாக மூடியே கிடக்கிறது.

 இதனால் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒரு நாளைக்கு ரூ,4500 வரை ஏடிஎம்களில் எடுக்கலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் ஏடிஎம் மையங்கள் எதுவும் செயல்படாததால் மோடியின் அறிவிப்பு வெறும் வெற்று அறிவிப்பாகவே உள்ளது என்று அரசு ஊழியர்கள் புலம்பினர். இதே நிலமை தான் தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. தலைமை செயலகத்தில் மட்டும் 5000 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனியார் நிறுவன ஊழியர்களும் இன்று சம்பள பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive