Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

அரசை தேர்ந்தெடுக்கும் நீங்கள் ஏன் நேரடியாக அரசை அணுகுவதில்லை கேள்வி எழுப்பிய ஐகோர்ட் !!

கே.கே.ரமேஷ் என்பவர் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக பொதுநல மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில்  இன்று தக்கல் செய்தார்.

அந்த மனுவில், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மாநிலம் முழுவதும் குழு அமைக்க வேண்டும் என்றும். பருவ மழை பொய்க்கும்போது நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தைக் காக்க வேண்டும் என்றும்,
வேளாண்துறையின் முன்னேற்றம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
அரசை தேர்ந்தெடுக்கும் நீங்கள் ஏன் நேரடியாக அரசை அணுகுவதில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசின் நிர்வாக முடிவுக்காக ஒவ்வொரு முறையும் ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள் என்றும் வினா எழுப்பினர்.
அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், விவசாயத்தை காக்க, விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, விவசாயிகள் தற்கொலை குறித்து நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading