Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

'ஆன்லைனில்' பணம் செலுத்தினால் 'காஸ்' சிலிண்டர் விலை குறையும்

        சமையல், 'காஸ்' சிலிண்டருக்கான கட்டணத்தை, 'ஆன்லைன்' மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கு, ஐந்து ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தள்ளுபடி:

மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், 'பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்கள், மின்னணு முறையில் அதற்கான பணம் செலுத்தினால், 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. 


சிறப்பு சலுகை:

இந்நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளன. 


ரூ.5 குறைப்பு:

இதன்படி, காஸ் சிலிண்டரை ஆன்லைனில் புக் செய்யும் வாடிக்கையாளர்கள், ஆன்லைன் வாயிலாகவே அதற்கான தொகையை செலுத்தினால் சிலிண்டருக்கான விலையில், ஐந்து ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும் என, அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன; இது, பணமற்ற பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் என, எண்ணெய் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading