NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயார்.. - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கருத்து.

🐮 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும்பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயாராக உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
🐮 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் குழுவுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் நள்ளிரவில் பேச்சு வார்த்தை நடத்தினர்.



📝 பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

🐮 அப்போது அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.

🐮 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.

🐮 உங்கள் போராட்டத்தை எங்கள் போராட்டமாக அரசு நினைக்கிறது.

🐮 அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

📝 மேலும், ஜல்லிக்கட்டு குறித்து 24 மணிநேரத்திற்குள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவார்.

🐮 நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் எனவும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

🔶 மேலும் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

🔷 நாடாளுமன்றத்திலும் குடியரசுத்தலைவரிடமும் எம்.பி.க்கள் மூலம் அவசரச்சட்டம் கொண்டு அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive