NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு மாணவர் விடுதிகளில் சமையலர் பணி

"அரசு மாணவர் விடுதிகளில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'

                           கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை விடுதிகளில் 9 ஆண் சமையலர்கள், 6 பெண் சமையலர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் மூலமாக காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வைத்து பிப். 10ஆம் தேதி காலை 10 மணியளவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க, 1.7.2016 அன்று 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், தமிழில் எழுதப் படிக்கவும், சமையல் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள நபர்கள் பிப். 8ஆம் தேதி மாலை 5.45 மணிவரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலோ அல்லது w‌w‌w.‌ka‌n‌y​a‌k‌u‌m​a‌r‌i.‌n‌ic.‌i‌n என்ற  இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive