Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்!

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விஷயத்தில்,
மதில்மேல் பூனையாக இருக்கும் தனியார் பள்ளிகளை இனம் கண்டு பள்ளிகல்வித் துறை கடிவாளமிட வேண்டும். அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளில், புதுச்சேரி மாணவ, மாணவியர் பின்தங்கியுள்ளனர். எப்போதாவது சிவில் சர்வீஸ் தேர்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதை புகுந்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2021- -22ம் கல்வி ஆண்டில், புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்பது, அரசின் இலக்கு.
தனியார் பள்ளிகள்
அரசு பள்ளிகள் நுாறு சதவீத சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்க, தனியார் பள்ளிகளின் நிலையோ மதில்மேல் பூனையாக உள்ளது. சமச்சீர் பாடத்திட்டமா அல்லது சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமா என முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன.
விதிமுறை மீறல்
புதுச்சேரி மாநிலத்தில் 303 சுயநிதி தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் 26 தனியார் பள்ளிகள் மட்டுமே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற பள்ளி கல்வித் துறையிடம் என்.ஓ.சி., வாங்கியுள்ளன. 
மீதமுள்ள 227 தனியார் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாட புத்தகத்தை பின்பற்றி பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தையே நடத்தி வருகின்றன.
சமச்சீர் பாடத்தை நடத்த வேண்டிய தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடம் நடத்தி, அதன் மூலம், பெற்றோர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலித்து வருகிறது.
டிமிக்கி
தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டுமெனில், முதற்கட்டமாக அந்த மாநில கல்வித் துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். பின், ஒரு ஆண்டிற்குள் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தை அணுகி இணைப்பு எண் பெற வேண்டும்.
இந்த இணைப்பு எண் எளிதில் கிடைப்பதில்லை. இடைநிலை கல்வி வாரியத்தின் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே இணைப்பு எண் கிடைக்கும்.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பு, விசாலமான விளையாட்டு மைதானம், காற்றோட்டமிக்க கட்டட வசதி, ஆய்வகம், நுாலகம் என, அனைத்தும் இருந்தால் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட உரிமம் வழங்கப்படுகிறது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான அளவு இடவசதி இல்லாததால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் புதுச்சேரி கல்வித் துறைக்கு டிமிக்கி கொடுத்து வருகின்றன. 
கல்வித் துறையின் என்.ஓ.சி., பெறாமல், சட்ட விதிகளுக்கு மாறாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடங்களை, பல்வேறு தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன.
கடிவாளம்
எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டன் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், சமச்சீர் பாடத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் பள்ளி கல்வித் துறை வெளியிட வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விதிமீறி செயல்படும் பள்ளிகளை இனம் கண்டு, கடிவாளமிட வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive