NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜெ.வுக்கு அளித்த சிகிச்சை என்ன?-RTI கேள்வி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த தகவல்களை தர,
மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. கவர்னர் அலுவலகமோ, அரசின் பொதுத்துறை பதில் அளிக்க அறிவுறுத்தி உள்ளது.
ஜெயலலிதாவின் மறைவில், மர்மம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது.
இந்நிலையில், ஜெ.,க்கு அளித்த சிகிச்சை தொடர்பாக, நீலகிரி மாவட்டம், தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் என்பவர், அப்பல்லோ மருத்துவ மனையிடம்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒன்பது கேள்விகள் கேட்டிருந்தார்.இந்தக் கேள்விகளுக்கு, அப்பல்லோ மருத்துவ மனை தகவல் தர மறுத்துள்ளது.
இது குறித்து ராஜ்குமாருக்கு, மருத்துவமனை யின் சட்ட மேலாளர், எஸ்.எம். மோகன் குமார் அனுப்பியுள்ள பதில் கடிதம்:
அப்பல்லோ மருத்துவமனை, இந்திய கம்பெனிகள் சட்டம், 1956ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, 'அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட்' என்ற பெயரில் இயங்கும் பொது நிறுவனம். எனவே, எங்கள் நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ன், அதிகார எல்லைக்கு உட்படவில்லை. அதனால், தாங்கள் கோரிய விபரங்களை, எங்களால் வழங்க இயலவில்லை.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கவர்னர் பதில் என்ன?
சிகிச்சை, மரணம், இறுதி சடங்குகள் குறித்து, ஒன் பது வித தகவல்களை கேட்டு, ஆசிரியர் ராஜ்குமார், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அலுவலகத் துக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கடிதம்
அனுப்பி இருந்தார்.கவர்னர் அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்:தங்கள் விண்ணப்பம், தகவல் அறியும் உரிமை சட்டம்-2005, 6வது பிரிவு, மூன்றாவது உட்பிரிவின் படி, தமிழக தலைமை செயலகத் தில் உள்ள, பொதுத்துறை யின், பொது தகவல் அலுவலருக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இது தொடர்பாக, பொதுத்துறை யின் மேல் முறை யீட்டு அலுவலருக்கு, மேல்முறையீடு செய்ய லாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




1 Comments:

  1. I want English study slow learner meterial at way to success pls post

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive