NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு விலக்கு பெறும் சில யோசனைகள்:

10 லட்சம் வருமானம் வரை வருமான வரி விலக்கு பெற முடியுமா? முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் செலவுகளும் கூடத்தானே செய்கிறது. இது தான் நடுத்தர, உயர் நடுத்தர மக்களின் கவலை. ஆனால்,  10 லட்சம் ரூபாய் வருமானம் வரை வருமான வரி கட்டுவதில் இருந்து தப்ப முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இப்ேபாது ஆன்லைனில் ஏகப்பட்ட நிறுவனங்கள் வருமானவரி அறிக்கை தாக்கல் செய்ய உதவுகின்றன. அவர்களுக்கு ஆன்லைனில் தாக்கல் செய்வது சுலபம். அனுபவம் வாய்ந்த சிலர் மட்டும் தான் முடிந்தவரை வரி கட்டுவதில் இருந்து விலக்கு பெற்று தருவர்.  இதோ ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு விலக்கு பெறும் சில யோசனைகள்:

* அடிப்படை சம்பளம் ரூ.2.5 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* வருமான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். பிபிஎப், வரி சேமிக்கும் மியூச்சுவல் பண்ட், பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் விலக்கு பெறலாம்.
* இந்த பிரிவின் கீழ், வீட்டுக்கடன் பிரின்சிபல் பங்கிலும் குறிப்பிட்ட சதவீதம் வரை விலக்கு பெறுவதற்கு பயன்படுத்தலாம்.
* வீட்டுக்கடன் செலுத்துவதில் ஓராண்டு செலுத்திய வட்டியில் இருந்து 2 லட்சம் வரை விலக்கு பெறலாம்.
* சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருந்தால், உங்களுக்கு வீட்டுவாடகை படி தருவதில் இருந்து கழித்து ெகாள்ள வழி உண்டு.
* வருமான வரி சட்டம் பிரிவு 80 சிசிடி யின் கீழ் தேசிய பென்ஷன் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்து வரிவிலக்கு பெறலாம்.
* இதுதவிர, கம்பெனி தரும் பென்ஷன் பங்கில் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் வரை வரி விலக்கு பெற முடியும்.
* மருத்துவ காப்பீடு வைத்திருந்தால் இன்னும் விலக்கு பெற முடியும். இல்லாவிட்டால் காப்பீடு செய்வது நல்லது. இதில் பிரிமியத்தில் 25,000 ரூபாய் வரை விலக்கு பெற பயன்படுத்தலாம்.
* உங்கள் வருமானத்தில் சில படிகள் கூட வரி விலக்கு பெறத்தக்கவை.  அவற்றை கண்டுபிடித்து சேர்த்து வருமானவரி விலக்கு பெறலாம்.
* மாதத்துக்கு 15,000 ரூபாய் வரை மருத்துவ அலவன்ஸ், 2,200 ரூபாய் வரை உணவு கூப்பன் ஆகியவற்றையும் வருமான வரி விலக்குக்கு கழிக்கலாம்.
* கம்பெனியில் இருந்து பரிசாக ஆண்டுக்கு ரூ.5,000 வரி விலக்குக்கு கழிக்கலாம்.
* போக்குவரத்து அலவன்ஸ் என்று மாதத்துக்கு 1600 ரூபாய், அதாவது ஆண்டுக்கு 19,200 வரை விலக்கு பெற முடியும்.
* குழந்தைகள் கல்விக்கு மாதம் அலவன்ஸ் ரூ.100 விலக்குக்கு பயன்படுத்தலாம். அதுபோல, விடுதி செலவு என்று மாதம் 300 வரை கழித்து கொள்ளலாம்.
* உங்கள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் என்றால், அதில் மொத்த வரியில் இருந்தும் ரூ.5000 வரி விலக்கு பெறலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive