NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG History Promotion Panel Regarding..

       அன்பிற்குரிய வரலாறு பட்டதாரி ஆசிரியர் பெரு மக்களுக்கு வணக்கம். என்னடா அனைத்து பாட முதுகலை ஆசிரியர் பணிக்கும் பதவி உயர்வுக்கான பட்டியல் கோரப்பட்டுள்ளதே.... ஆனால் வரலாறு பாடத்திற்கு மட்டும் இன்னும் கேட்கப்படவில்லையே என யாரும் வருத்தப்பட வேண்டாம்.... பயப்படவும் வேண்டாம்.... வரலாறு பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வானது ஒரே பாடமாகப் பயின்றுள்ள வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப் பட வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் என்னுடைய தலைமையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரைக் கொண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அவ் வழக்கில் நியாயம் இருப்பதாகக் கருதி சென்னை உயர்நீதி மன்றத்தால் வரலாறு பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இரண்டு வார காலத்திற்குத் தடையாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இரண்டு வார காலத்திற்குள் அரசு தரப்பினரால் தடையாணை நீக்கம் செய்யப்படாமையால் அது நிரந்தர தடையாணையாக மாறிவிட்டது. தற்சமயம் அவ் வழக்கானது இறுதி தீர்ப்பினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் வரலாறு பாட ஆசிரியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப் போவது மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு நிரப்பப்பட வேண்டிய இடங்களுடன் இவ்வாண்டு ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களும் சேர்த்து கணிசமான வரலாறு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்ளதால், வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானோர்க்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கப் பெற உள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வெற்றியை நிலை நாட்ட வேண்டுமாயின், சிறிது காலம் பொறுத்துத்தான் ஆக வேண்டும்....ஒரு நியாயத்தை நிலை நாட்ட வேண்டுமானால் அதிகமாக போராடித்தான் ஆக வேண்டும்.... பொறுத்தருளிய அனைத்து வரலாறு பாட ஆசிரியர்களுக்கும் நன்றிகள் கோடியை உரித்தாக்குகிறேன்......
தங்கள் உண்மையுள்ள,
ப.நடராசன், பட்டதாரி ஆசிரியர் (வரலாறு),
அரசு மேல்நிலைப் பள்ளி,
ஏலகிரி, தருமபுரி மாவட்டம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive