NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 14.2.2017

மேஷம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ரிஷபம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மிதுனம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புது நட்பு மலரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கன்னி
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் வந்துப் போகும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
துலாம்
மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்கள் தாமதமாகும். வியாபாரத்தில் புது முதுலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
விருச்சிகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
தனுசு
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
மகரம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
கும்பம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
மீனம்
தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive