NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 17.2.2017

மேஷம்
சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். புது நட்பு மலரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ரிஷபம்
வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மிதுனம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்-. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கடகம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
சிம்மம்
பேச்சிலே ஒரு கம்பீரம் தெரியும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கன்னி
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
துலாம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை இருக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
விருச்சிகம்
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். சொந்த-பந்தங்களால் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
தனுசு
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மகரம்
உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கும்பம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மீனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive