NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த சி.இ.ஓ.,க்கள் கூட்டம் திடீர் ரத்து 'காணொளிகாட்சி'யாக மாற்றம்-DINAMALAR

       சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) கூட்டம், திடீரென நேற்று ரத்து செய்யப்பட்டது.
         இதற்கு மாற்று நடவடிக்கையாக, 'வீடியோகான்பரன்சிங்' மூலம் சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

         தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதுகுறித்து கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் பாண்டியராஜனும், "ஏப்., கடைசியில் தேர்வு நடத்தப்படும்," என தெரிவித்துள்ளார்.
 
          இந்நிலையில், பிப்.,20 முதல் இதற்கான விண்ணப்பங்களை வழங்க டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்த சென்னையில், பிப்.,3ல் மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டத்திற்கு டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், 'தற்போது பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடந்து வருவதால் மாவட்டத்தில் இருந்து யாரும் சென்னையில் டி.ஆர்.பி., கூட்டத்திற்கு செல்லக் கூடாது,' என சி.இ.ஓ.,க்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டள்ளது.
இதனால் வேறு வழியில்லாமல் அந்தந்த மாவட்டத்தில் இருந்தே 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்துள்ளது.

 
இப்பிரச்னை குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
 
          கல்வித் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. மாவட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் செயலர், இயக்குனர் (புரொட்டாகால்) வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் டி.ஆர்.பி.,யின் உத்தரவுகள் நேரடியாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு காரணம் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு இடையே நீடிக்கும் 'ஈகோ பிரச்னை' தான் என்கின்றனர். இதனால் 'டி.ஆர்.பி., கூட்டத்திற்கு யாரும் சென்னைக்கு வரவேண்டாம். பிளஸ் 2 செய்முறை தேர்வு முடியும் வரை அந்தந்த மாவட்டங்களில் தான் சி.இ.ஓ.,க்கள் இருக்க வேண்டும்,' என தேர்வுத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. இத்தகவலால் சி.இ.ஓ.,க்கள் குழப்பமடைந்தனர். டி.ஆர்.பி.,க்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது, என்றனர்.

ஒரே நாளில் தேர்வுகள்! 

 
            டி.இ.டி., தேர்வு ஏப்.,29, 30ல் நடக்க வாய்ப்புள்ள நிலையில், அதே நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 7பி' மற்றும் 'குரூப் 8' பிரிவு தேர்வுகள் நடக்கின்றன.இதில் பங்கேற்க 60 ஆயிரத்திற்கும் மேல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் டி.இ.டி., 2ம் தாள் தேர்வுக்கு பி.எட்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப்., கடைசி வாரத்தில் அப்போது பி.எட்., செய்முறை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.




3 Comments:

  1. Onnu, rendu kulappam illeenga, oraayiram kulappam pallikalvi thuraiyil undu. ithil ondruthan TET thervu. Minister'um TET visayathil athigamave kulambi, B. Ed., pattatharikalaiyum naaloru meniyum poluthoru vannamumaga kulappi kondirukirar.

    ReplyDelete
  2. Onnu, rendu kulappam illeenga, oraayiram kulappam pallikalvi thuraiyil undu. ithil ondruthan TET thervu. Minister'um TET visayathil athigamave kulambi, B. Ed., pattatharikalaiyum naaloru meniyum poluthoru vannamumaga kulappi kondirukirar.

    ReplyDelete
  3. Tnpsc & TET thervugalai ore naalil (Apr'29&30) eppadi elutha mudiyum? B.Ed., 2nd year manavargalum TET thervu elutha mudiyatha nilaiyil ullanar. Intha adippadai visayam kooda TRB'kkum, Ma.Foi.Pandiyarajanukkum theriyamal ponathu yen? Mr.Minister avargale...muthalil unga 'Ego', 'Super Ego' pirachinaiyai mudichittu piragu enga TET pirachinaikku vaanga...!!!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive