NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களிலும் விலை முத்திரை (MRP) இருக்க வேண்டிய அவசியம் இல்லை- விரைவில் சட்டம்

நமது அன்றாட வாழ்வில் வாங்கப்படும் பொருட்களின் மீது அச்சிடப்படும் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) லேபிள் என்ற விஷயம் விரைவில் ககனவாக மாறப் போகிறது. ஆம், உலக விற்பனையாளர்கள் தங்களின் வளர்ச்சிக்கு இதைத் தடைக்கல்லாக நினைப்பதால் அரசாங்கம் இந்தக் கட்டாய நடைமுறையை அகற்றி நிறுவனங்களின் செயல்முறையைச் சுலபமாக்க எண்ணுகிறது.

"இந்திய சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் சில ஒற்றை பிராண்ட் சில்லறை வணிகர்கள், கடையில் இருக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் எம்ஆர்பி முத்திரையை (ஒரு குறிப்பிட்ட பொருளின் விலையைக் காட்டும்) ஒட்டுவது ஒரு சிக்கலான செயல்முறை ஆகும்," என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி மணிகன்ட்ரோலிடம் கூறினார்.
அவர், பெரும்பாலான நாடுகளில் எம்ஆர்பி முத்திரையை வெளியிடுவது கட்டாயமானதல்ல ஏனென்றால் பொதுவாக அனைத்துப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ள அலமாரியில் அதன் விலை குறிப்பிடப்பட்டிருக்கும் என்றார்.
இது பெரிய பல்பொருள் அங்காடிகளில் சாதியமாகும் ஆனால் தெருவுக்குத் தெரு சின்னசின்ன மளிகைக் கடைகளுள்ள இந்தியா போன்ற நாட்டில் இதனைச் செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.
இந்தியாவில், நுகர்வோர் விவகார துறைகள்மூலம் நிர்வகிக்கப்படும் சட்ட அளவியல் சட்டம், ஒரு பிராண்ட் சில்லறை கடையில் விற்கப்படும் பொருட்களுக்கு விலை முத்திரை அச்சிடப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது.
எம்ஆர்பி டேக்கை அகற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல; அதற்காகச் சட்ட திருத்தங்கள் உட்பட சட்டமன்ற மாற்றங்கள் தேவைப்படலாம். அதைத் தவிர, நாடு முழுவது உள்ள அனைத்து கடைகளிலும் அனைத்து பொருட்களும் ஒரே விலையில் விற்கப்பட வேண்டுமென விதிகளும் சட்டங்களும் அமைக்கப்பட்டு தன்னிச்சையான விலை அமைப்பிற்கு வழிவகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் உலகளாவிய நடைமுறைகளுடன் ஒத்துப்போக முயற்சிக்கிறது என்று அதிகாரி கூறினார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக, வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) விதிகளை எளிதாக்க அரசாங்கத்தின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியான ஒரு புதிய அமைப்பை நிறுவி, நடைமுறை தாமதங்களை நீக்கி, இந்தியாவை ஒரு உலகளாவிய முதலீட்டு இடமாக மாற்ற நினைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை அறிவித்தார்.
"கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது அரசாங்கம் ஏற்கனவே அன்னிய நேரடி முதலீடு கொள்கையில் கணிசமான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது," என்று ஜேட்லி கூறினார். "90 சதவீதத்திற்கும் மேலான மொத்த அந்நிய நேரடி முதலீடு இப்போது தானியங்கி வழியாக உள்ளன. நாம் இப்போது எஃப்ஐபிபி(FIPB) யை அகற்றும் கட்டத்தை அடைந்துவிட்டோம். ஆகவே, நாங்கள் 2017-18 இல் எஃப்ஐபிபி(FIPB) யை ஒழிக்க முடிவு செய்துள்ளோம். "
நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பபிற்கு ஏற்ப, அரசாங்கம் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் தடைகளாக இருக்கும் சில நடைமுறைகளை மாற்ற எண்ணுகிறது என்று அதிகாரி கூறினார்.
"இப்போது நாம் அதிக முதலீடுகள் செய்ய உறுதி செய்யும், முதலீட்டு செயல்முறைகளில் வணிகம் செய்வதை எளிமையாக்கும் செயல்முறையைத் தாராளமயப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், "என்று அதிகாரி கூறினார்.
எஃபைபிபி(FIPB) க்குப் பதிலாகச் செயல்முறைகள் மற்றும் அனுமதி வழங்குதலை விரைவுபடுத்தும் ஒரு புதிய நுட்பம் கொண்டுவரப்படும். அரசாங்கத்திற்கும் பெரு நிறுவனங்களுக்கும் நன்மை தரவிருக்கும் இத்திட்டம் சாமானியனுக்கு என்ன கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive