NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரப்போகுது ஜியோ டிடிஎச்.. உங்களுக்கு எந்த பேக் வேண்டும்? ரெடியா இருங்க....

ஜியோ டிடிச் : 5 பிளான்கள், 432+ சேனல்கள் (திட்டங்கள், விலைப்பட்டியல்).!

       ஜியோ டிடிஎச் பேஸிக் ஹோம் பேக், ஜியோ டிடிஎச் கோல்ட் பேக், ஜியோ டிடிச் சில்வர் பிளான்ஸ், ஜியோ டிடிஎச் பிளாட்டினம் பேக், ஜியோ மை பிளான்ஸ் என பல பேக்ஸ்கள் - உங்களுக்கு எது வேண்டும்.?



ரிலையன்ஸ் ஜியோ அதன் சொந்த நெட்வொர்க்கின் ஜியோ டிடிஎச் செட் டாப் பாக்ஸ்கள் மற்றும் டிஷ் டிவி சேனல்களை மிக விரைவில் தொடங்கவுள்ளதை உறுதிப்படுத்தும் வண்ணம் "பலமான" தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின் கீழ் ஜியோ டிடிஎச் செட் டாப் பாக்ஸின் வெளியீடு தேதி என்ன.?அதன் சேவைகளின் திட்டங்கள் என்ன.? அதை ஆன்லைன் முன்பதிவு / பதிவு, சேனல்கள் பட்டியல், என்ன விலை நிர்ணயம் போன்ற பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோப்ரைம்.ஆர்க் வலைதளத்தில் வெளியாகியுள்ள தகவலில் இருந்து ஜியோ டிடிச் சார்ந்த பல தெளிவான விவரங்களை நம்மால் பெற முடிகிறது.

நிலத்தடியில்

ரிலையன்ஸ் குழுமம் ஜியோ இழை பிராட்பேண்ட் கொண்டு ஜியோ டிடிஎச் சேவைகளை விரைவில் வழங்கவுள்ளது. இப்போது வரை கேபிள்கள் மற்றும் இணைப்புகளை கிராமங்கள் மற்றும் நகரங்களின் நிலத்தடியில் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் சமீபத்தில் அதிகாரப்பூர்வ வெளியீடுக்கு முன்பே ஜியோ டிடிஎச் புகைப்படம் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடக தளங்களில் வைரல் ஆனது.

வெளியீடு நாள் எப்போது

அந்த புகைப்பட கசிவில் இருந்தே ஜியோ கான் டிடிச் சேவையை விரைவில் அறிவிக்கும் என்ற நம்பிக்கை முழிக்க இப்போது அந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் வண்ணம் ரிலையன்ஸ் டிடிஎச் சேவை வெளியீடு நாள் எப்போது என்ற தகவலை ஜியோப்ரைம்.ஆர்க் வலைத்தளம் வெளியிட்டுள்ளது.


ஏப்ரல் மாதத்திற்கு பிறகு

வெளியான தகவலில் 'ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது ஜியோ பிராட்பேண்ட் நிர்வாகத்தை அமைத்து ஒளியிழை இணைப்புகளை நகர்ப்பகுதிகளில் அமைக்க தொடங்கியுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஜியோ சேவையானது இந்த 2017-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று அறியப்படுகிறது.

ரிமோட் கண்ட்ரோல்

வெளியீட்டு தேதி மட்டுமின்றி வெளியாகும் ஜியோ டிடிஎச் செட் டாப் பாக்ஸில் பேக் ஆனது செட் டாப் பாக்ஸ், ஒரு ரிமோட் கண்ட்ரோல், ஒரு டிஷ், வயர், மற்றும் பயனர் கையேடு ஆகியவைகளை கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜியோ டிடிஎச் திட்டங்கள்

நம்பிக்கையான ஆதாரங்களின் படி, ஜியோ டிடிஎச் டிஷ் செட் டாப் பாக்ஸ் ஆனது 432 சேனல்களை வழங்கும் அதில் 350க்கும் மேற்ப்பட்ட இயல்பான சேனல்கள் மற்றும் மீதமுள்ள 50க்கும் மேற்ப்பட்டவைகள் 4கே தீர்மானம் கொண்ட எச்டி சேனல்களாக இருக்கும். ஆக ஜியோ டிடிச் சேனல்கள் ஆனது எல்இடி மற்றும் எல்சிடி டிவிக்கள் கொண்ட பயனர்களுக்கு நன்மைகளை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜியோ டிடிச் விலை நிர்ணயம்

மேலும் இணைய ஆதாரங்களின் படி,ஜியோ டிடிஎச் விலை நிர்ணயம் ஆனது ரூ.180/-ல் இருந்து ரூ.200/-க்குள் இருக்கலாம். ஏனெனில் மற்ற அனைத்து டிடிச் சேவைகளின் விலை நிர்ணயத்தில் இருந்து மிகவும் மலிவான செலவில் சேவைகளை வழங்க ஜியோ விரும்புகிறது ஆக எதிர்பார்க்கப்படும்/கணக்கிடப்படும் செலவு ரூ.200/-க்கும் குறைவான விலையில் மாதந்தோறும் கிடைக்கலாம்.

ஸ்ட்ரீமிங் / பப்பரிங் இல்லாமல்

மேலேயும் இந்த ஜியோ டிடிஎச் சேனல்கள் ஸ்ட்ரீமிங் / பப்பரிங் இல்லாமல் நேரடியாக 4கே உள்ளீடுகளை பார்க்க அனுமதிக்கும் மற்றும் ஜியோ டிடிஎச் வெளியீடு அன்று 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோவின் அறிமுகத்திற்காக

ஆக மீண்டும் ஏர்டெல், டிஷ் டிவி, டாட்டா மற்றும் மற்ற நிறுவனங்களை காலி செய்யும் வண்ணம் ஒரு வெல்கம் ஆபரை நாம் எதிர்நோக்கலாம். ஏர்டெல் நிறுவனம் நேற்று அதன் இன்டர்நெட் டிவி சேவையை ஜியோ பாணியில் 3 மாத கால இலவச சேவை என்று அறிவித்துள்ள போதிலும் அனைத்து டிடிஎச் வாடிக்கையாளர்களும் ஜியோவின் அறிமுகத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்ற என்பது வெளிப்படை.

பல 'பேக்' தகவல்கள்

வெளியான வெவ்வேறு செய்தி மூலங்களின்படி மாறுபட்ட ஜியோ திட்டங்கள் பற்றிய தகவலை நாம் பெற்றுள்ளோம் அதன்படி - ஜியோ டிடிஎச் பேசிக் ஹோம் பேக், ஜியோ டிடிஎச் கோல்ட் பேக், ஜியோ டிடிச் சில்வர் பிளான்ஸ், ஜியோ டிடிஎச் பிளாட்டினம் பேக், ஜியோ மை பிளான்ஸ் என பல பேக் தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி ஜியோ டிடிச் சேவையில் தென் பிரதேசம், வட பகுதி, மேற்கு பகுதி, கிழக்கு பகுதிகளுக்கான ஜியோ டிடிஎச் திட்டங்களும் இருக்கும் என்று அறியப்படுகிறது.

மை பேமிலி பேக்

அதிகாரப்பூர்வமற்ற ஜியோவின் டிடிஎச் திட்டங்கள் விலை நிர்ணயம் என்று பார்க்கும் போது..
இயல்பான பேக் ரூ.49-55/-
அனைத்து ஸ்போர்ஸ் சேனல்கள் (எச்டி)ரூ.60-69/-
வேல்யூ ப்ரைம் சேனல்கள் ரூ.120-150/-
குழந்தைகள் சேனல்கள் ரூ.188-190/-
மை பேமிலி பேக் ரூ.200-250 /-
மை பிளான் ரூ.50-54/-
மை ஸ்போர்ட்ஸ் ரூ.159-169/-
பிக் அல்ட்ரா பேக் ரூ.199-220/-
மெட்ரோ பேக் ரூ.199-250/-
தூம் பேக் ரூ.99-109/-


சவுத் இந்தியன் வேல்யூ பேக்

அதிகாரப்பூர்வமற்ற ஜியோ டிடிஎச் தென்னிந்திய திட்டங்கள் என்று பார்க்கும் போது,
சவுத் இந்தியன் வேல்யூ பேக் ரூ.120-130/-
சவுத் இந்தியன் மேக்சிமம் ரூ.134-145/-
மை ஸ்போர்ட்ஸ் ரூ.145-150/-
மெகா பேக் ரூ.199-299/-
சவுத் அல்ட்ரா ரூ.199-250/-
 

எதிர்பார்க்கும் ஜியோ டிடிஎச் சேனல்கள் பட்டியல்:

கலர்ஸ் டிவி (அனைத்து சேனல்கள், வைகாம் 18)
சோனி (அனைத்து சேனல்கள்)
ஸ்டார் நெட்வொர்க் (அனைத்து சேனல்கள்)
ஸீ நெட்வொர்க் (அனைத்து சேனல்கள்)
விளையாட்டு அலைவரிசை
ஸ்டார் இடங்கள்
டென் ஸ்போர்ட்ஸ்
டிடி ஸ்போர்ட்ஸ்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive