NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET 2017 Exam Duty: முதுநிலை ஆசிரியர்கள் முடிவு

       ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) பணியில், தகுதி குறைவான பணி ஒதுக்கீடு செய்துள்ளதால், தேர்வுப் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஏப்.,29 அன்றும், 2ம்தாள் தேர்வு ஏப்.,30ம் தேதியும் நடக்கிறது.இத்தேர்வு பணியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல முதுநிலை ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு நியமனம் செய்யப்படுவதால், பல ஆண்டுகளாக முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் மூத்த முதுநிலை ஆசிரியர்கள், பணியில் இளையோரான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கீழ், துறை அலுவலர்களாக பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மேலும், கூடுதல் துறை அலுவலர்களான பட்டதாரி 
ஆசிரியர்களின் கீழ் அறைக் கண்கணிப்பாளராகவும் செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆசிரியர் தகுதி தேர்வு பணிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும், என மாநிலக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

சங்க மண்டலச் செயலாளர் கதிரேசன், மாவட்டத் தலைவர் சலேத்ராஜா கூறியதாவது: 
அனுபவத்திலும், தகுதியிலும் குறைந்தவர்களுக்கு கீழ் பணி செய்ய அறிவுறுத்துவது எந்த நிலையிலும் ஏற்பதற்கு இல்லை. அதனால் சங்க கூட்டத்தில் 'டெட்' தேர்வை புறக்கணிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.




1 Comments:

  1. then why u want BTs to do exam duty in 12th public exam....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive