NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC Exam - Motivation Article

#எப்போதும் தயாரய்  இரு !

நண்பர்களுக்கு வணக்கம்
ஒரிரு வாரங்களில் குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிக்கை வர  இருக்கிறது. எனவே அனைவரும் எதிர்பார்ப்பில் இல்லாமல் தேர்வு நாளை  நோக்கி ஆயத்தமாகவே இருப்பீர்கள் என கருதுகிறேன். இருப்பினும் குருப் 4 தேர்வில் கட் ஆப் மதிப்பெண்  விளிம்புக்கே சென்று விட்டதை நினைத்து அச்சமடையத்தேவை இல்லை.அதில் இருந்து பாடம்  கற்றுக்கொண்டிருப்பீர்கள்.

போட்டித்தேர்வின் அடிப்படை அம்சமே ஆயத்தமாய் இரு என்பது தான், ஆயத்தமாய் இருப்பவர்களுக்கு ஒரு உதாரணத்தை குறிப்பிட விரும்புகிறேன் நீங்கள் அனைவரும் இராணுவத்தையும் அங்கே கொடுக்கப்படும் பயிற்சியையும் அறிந்திருப்பீர்கள் , போர் நடைபெற்றாலும் நடைபெறாவிட்டாலும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து களத்திற்கு சென்று  வீரர்கள் பயிற்சி எடுக்கவேண்டும், அவர்கள் எடுக்கும் பயிற்சி எப்போதாவது தான் பரிசோதிக்கப்படுகிறது ஆனாலும் அவர்கள் பயிற்சி எடுப்பதை நிறுத்துவதில்லை அதுபோல் நாமும் நம் தயாரிப்பை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

கடந்த குருப் 4 தேர்வில் நூலிழையில் கோட்டை விட்டவர்களெல்லாம் வருந்துவது வேலை கிடைக்காமல் போனதால் அல்ல சுற்றுப்புறத்தினர் என்ன சொல்வார்களோ என்று தான் நீங்கள் அஞ்சினீர்கள். இதே அச்சத்தோடு தேர்வுக்கு  தயாராவதை மாற்றிக்கொள்ளுங்கள். கடந்த குருப் 4 தேர்வில் நீங்கள் செய்த தவறுகளை பட்டியலிடுங்கள் அதனை தவிர்ப்பதற்கு என்ன செய்யவேண்டும் என யோசனை செய்யுங்கள் உங்கள் நண்பர்களிடமும் ஆலோசனை கேளுங்கள் செய்யக்கூடியது என்ன , செய்யக்கூடாதது என்னவென்று தெளிவு கிடைக்கும். நூலிலையில் வாய்ப்பினை தவறவிட்டவர்கள் செய்த பொதுவான தவறுகள், 1. தேர்வுக்கூடத்தில் நேரமேலாண்மை இல்லாதது. 2. கவனக்குறைவாக கேள்வியை வாசித்து தவறாக புரிந்துகொண்டு விடையளித்தது. 3. நடப்பு நிகழ்வுகளை முறையாக திரும்பி பார்க்கதது , 4. அறிவியல் பாடத்தை முழுமையாக படிக்காமல் போனது 5. பாடப்புத்தகத்தை நம்பாமல் வேறு புத்தகங்களை நம்பியது போன்றவைதான் அடிப்படையாக நீங்கள் செய்த தவறுகள் எனவே  இதுமாதிரி தவறுகளை தவிர்க்க என்ன செய்யவேண்டும் என சிந்தித்துவிட்டு படிப்பினை துவங்குங்கள்.

ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியர் திடீரென நுழைந்து மாணவர்கள் எதிர்பாரத நேரத்தில் அனைவரின் கையிலும் ஒரு வினாத்தாளை கொடுத்து தேர்வெழுத சொன்னார். அவ்வினாத்தாள் வழக்கமாக வினாக்களை மேலிருந்து கீழாக கொண்டிருந்தது. அனைவரின் கையிலும் வினாத்தாள் கொடுக்கப்பட்ட பின்பு வினாத்தாளின் மறுபக்கம் தான் வினாக்கள் உள்ளது அதற்கு பதிலளியுங்கள் என்றார் ஆனால் அப்பக்கத்தில்  ஒரு சிறிய  கரும்புள்ளி மட்டும்தான் இருந்தது . மாணவர்களின் முகத்தில் ஒரு பதற்றம்  நீங்கள் அந்தப்பக்கத்தில் பார்த்ததை பற்றிதான் விடையளிக்கவேண்டுமென்றார் .

குழப்பத்தில் ஆழ்ந்த மாணவர்கள் ஏதேதோ விடையளித்திருந்தார்கள், தேர்வு முடிந்ததும் அனைவரின் பதில்களையும் சத்தமாக வாசிக்கத்த் துவங்கினார் ஆசிரியர் அனைவரும் அந்தப்புள்ளியைப் பற்றி எழுதினார்கள், புள்ளி கருப்பாக இருந்தது, தாளின் மையத்தில் இருந்தது ஒரத்தில் இருந்தது என்றுதான் பதலளித்திருந்தனர். அனைவரும் பதில்களையும் வாசித்தபின்பு ஆசிரியர் சொன்னார் ஏன் ஒருவரும் அந்தப் பக்கத்தில் இருந்த காலியான வெள்ளை இடத்தைப்பற்றியும் அதில் நிறைய எழுதலாம் எனவும் ஒருவரும் எழுதவிலை , ஏன் நீங்கள் அனைவரும் ஒரு எதிர்மறையான விசயத்தைப்பற்றி எழுதினீர்கள், நேர்மறையாக உள்ள வெள்ளைப்பக்கத்தில் நிறைய எழுதியிருக்கலாம் என்றார். இதைப்போல்தான் நாமும்  தேர்வில் நாம் செய்த தவறுகளை மட்டுமே மனதில் வைத்து செய்யக்கூடிய சரியான செயல்களை நினைப்பது இல்லை. எப்போதும் நேர்மறையாகவே தேர்வினை அனுகுங்கள்.

புதிதாக வருபவர்கள் நினைக்கலாம் பல லட்சம்பேர் இத்தேர்வு எழுதுகிறார்கள் இதில் நமக்கு எப்படி கிடைக்கும் என , உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.  நாம் படித்த வகுப்புகளில் ஐம்பது பேர் இருந்திருக்கலாம் அனைவருக்கும் ஒரே வகுப்பு , ஒரே பாடத்திட்டம், ஒரே ஆசிரியர் ஒரே வினாத்தாள் ஆனால் தேர்வில் அனைவரும் முதலிடம் வருவதில்லை , கடின உழைப்பையும் , அர்ப்பணிப்புடன் தயாரானவர்கள் மட்டுதான் முன்னால் வருகிறார்கள் அதேபோல் யாரெல்லாம் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தயாராபவர்களுக்கு வெற்றிக்கனி கைகளில்.

”சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.”

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
வாழ்த்துக்களுடன்

mano




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive