NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

35 வயதை தாண்டி விட்டீர்களா? அப்போ... இது உங்களுக்காகத்தான்...!

     35 வயதை கடந்துவிட்டால்... வயது கூடக்கூட நாம் ஆரோக்கியத்தில் கொள்ளும் அக்கறையும் கூட வேண்டும்.       குறிப்பாக, 35 வயதைக் கடந்தவர்கள் தமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் வைக்க வேண்டும் என்று ஆய்வுகளும், டாக்டர்களும் சொல்கின்றனர்.

        பொதுவாக 35 வயது வரை உணவில் பெரிதாக கட்டுப்பாடு வைத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் 35 வயதை கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
சீரான உணவுப் பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகளும்தான் நோயை உங்கள் பக்கம் வரவிடாமல் தடுக்கும்.

முக்கியமாக, தற்போது பொதுவான நோயாகி வரும் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க, உணவுக் கட்டுப்பாடு மிக, மிக முக்கியம்.

அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச், சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேழ்வரகு போன்ற தானிய வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் வெல்லம், கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்வது ரொம்பவே நல்லது.

நெய்யை கட்டுப்பாட்டோடு பயன்படுத்த வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோய் தவிர மற்ற நோய்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம்.

உடல் பக்கம் எந்த நோயும் தலைவைத்து படுக்கக்கூடாது என்று நினைப்பவர்களா நீங்கள்... அப்போ... தினமும் வேப்பிலைக் கொழுந்தை சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோய் மட்டுமல்ல... எந்த நோயும் உங்களை திரும்பிக்கூட பார்க்காது.

-தஞ்சாவூர் ஜி.பாலகிருஷ்ணன், இயற்கை நல ஆர்வலர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive