NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 8 எளிய டிப்ஸ்!

வயிற்றை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுஎன்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

தவறானஉணவு பழக்கம் காரணமாக நீங்கள்வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். உங்கள் உணவு பழக்கத்தை மாற்றுவதன்மூலம் இதில் இருந்து நிவாரணம்பெறலாம்.
இந்தஅறிகுறிகளில் இருந்து தப்பிக்க இங்கேசில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன...


நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்:
நார்ச்சத்துஅதிகம் உள்ள உணவுகளை அதிகம்சாப்பிட வேண்டும். உங்கள் தினசரி உணவுகளில்பச்சை காய்கறிகளையும் பருவகால பழங்களையும் சேர்ப்பதன்மூலம் உணவில் நார் அதிகரிக்கும். உங்கள் உணவில் தானியங்கள், ஓட்ஸ், பல தானிய மாவு போன்றவற்றைசேர்த்துக்கொள்ள வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்!
கொழுப்புநிறைந்த உணவுகள் உங்கள் உடல்எடையை அதிகரிக்கும். அதிக அளவு எண்ணெய்உள்ள உணவுகள், பழைய எண்ணெய்யில் செய்யப்பட்டஉணவுகள் உடலுக்கு பல பிரச்சனைகளை தரும். எனவே, வேக வைத்த உணவுகள், தீயில் வாட்டப்பட்ட உணவுகளை மாற்றாக எடுத்துக்கொள்வதுசிறந்தது.
கோழி இறைச்சி:
கோழி மற்றும் மீன் ஆகியவற்றில்ஆட்டு இறைச்சியுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவு கொழுப்புகாணப்படுகிறது. இது எளிதில் செரிக்கப்படுகிறது. புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் தினசரிதேவைக்காக சாலடுகள் வடிவில் கோழி மற்றும்மீன் வகைகளை முயற்சி செய்யலாம்.

புரோட்டோ ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தஉணவுகள்:
நமது செரிமான அமைப்பு நல்லபாக்டீரியாக்களை கொண்டுள்ளது. அவை செரிமானம் மற்றும்சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும்அதிகரிக்கின்றன.
ஒழுங்கான இடைவெளிகள்:
ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது, எப்போதும் நேரம் மற்றும் வழக்கமானஇடைவெளியில் சாப்பிட வேண்டும். இதுகுடலை பாதுகாக்கும். ஊட்டச்சத்துக்களை அதிகமாக உறிஞ்கிறது. இதுஎடையைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது மேலும் வளர்சிதை மாற்றவளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
 நீர்:
உடலில்உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் உதவுகிறது, மேலும் ஒரு மலச்சிக்கல்ஏற்படாமல் தடுக்கிறது. நீரை சுத்தப்படுத்தி, வடிகட்டிபருக வேண்டும். இல்லையெனில் அசுத்தமடைந்த தண்ணீர் குடலுக்கு தீங்குவிளைவிக்கும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜன்க் உணவு:
நகரமயமாக்கல்மற்றும் உணவு தொழில்நுட்ப முன்னேற்றத்தால், நாம் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜன்க் உணவைஅதிக அளவில் சாப்பிடுகிறோம். இதில்மைதா கலந்திருப்பதால், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமானபிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நன்றாக மென்று சாப்பிட வேண்டும்:

எந்தவொருதிசை திருப்பமும், மன அழுத்தம் இல்லாமல்உணவின் சுவையை அனுபவித்து நன்றாகமென்று சாப்பிட வேண்டும். அதிகஅளவு உணவை ஒரே முறைஉண்பதை விட, கொஞ்சம் கொஞ்சமாகஉணவை சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அளவாகசாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும். மது, தேநீர், காபி மற்றும் பேக்கேஜ்ட் பானங்கள்ஆகியவற்றை தவிர்க்கவும். அவை சத்துக்களை உறிஞ்சுவதில்பிரச்சனையை ஏற்படுத்தும். சாப்பிடும் போது கவனச்சிதறலை தவிர்க்கவேண்டும்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive