NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மனதை மாற்றிய அமைச்சர்!’ - ஸ்டிரைக் வாபஸ் பின்னணி !!

‘போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கை வாபஸ் பெற, மூத்த அமைச்சர் செங்கோட்டையனின் சாதுர்யமான பேச்சே காரணம்' என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 'தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதால், ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிய ஊழியர்களிடம் பிடித்தம்செய்த பணம் செலவழிக்கப்பட்டதைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் பஸ் சேவையில்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு போக்குவரத்துக் கழகங்கள், ஊழியர்களுக்கு 12,860 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சொல்கின்றன. இதில், அவசரத் தேவையாகக் கருதும் 7,000 கோடி ரூபாயை உடனடியாகத் தர தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு ஏற்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், 'போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையெனில், அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என்ற அதிரடி உத்தரவை மதுரை உயர்நீதிமன்றம் கிளை பிறப்பித்தது. போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம், நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில், இந்த உத்தரவு தொழிற்சங்கங்களை சிந்திக்கவைத்தது. இதையடுத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அடுத்து, அரசு ஏற்பாடுசெய்த பேச்சுவார்த்தையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தமுறை மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணியுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தொழிற்சங்கங்கள் தரப்பில், '750 கோடி ரூபாய்மூலம் எந்தவித அவசரத் தேவைகளையும் சரிசெய்ய முடியாது. இதனால், கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது, அமைச்சர் செங்கோட்டையன், 'உங்களது கோரிக்கைகள் நியாயமானது. இன்றைய சூழ்நிலை என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக, அரசுக்கு வரவேண்டிய வருவாயைப் பெறுவதில் சில சிரமங்கள் உள்ளன. இந்தச் சமயத்தில், கூடுதல் தொகையை ஒதுக்குவது என்பது இயலாத காரியம். இதனால், 1,250 கோடி ரூபாயை முதற்கட்டமாக ஒதுக்க உறுதியளிக்கிறோம். அடுத்து, செப்டம்பர் மாதத்துக்குள் படிப்படியாக உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். இதற்கு, சில தொழிற்சங்கங்கள் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன்பிறகு அமைச்சர் செங்கோட்டையன், வெளிப்படையாகவே பேசியுள்ளார். 'நானும், இந்தத் துறையில் அமைச்சராக இருந்துள்ளேன். இதனால், போக்குவரத்துக் கழகங்களில் உள்ள சிரமங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். தற்போது, கோடை விடுமுறை என்பதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு வசூல் அதிகமாகக் கிடைக்கும். இந்தச் சமயத்தில் நீங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இதனால், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படும். எனவே, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுவிட்டு, பஸ்களை இயக்குங்கள். உங்களின் கோரிக்கைகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுகிறோம்' என்றதும், தொழிற்சங்கங்கள் கிரீன் சிக்னல் காட்டியுள்ளன.




 உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றதுடன், நேற்று இரவே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், சென்னையில் இயக்கப்பட்ட தனியார் பஸ்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. இன்று காலை முதல் வழக்கம்போல அனைத்து பஸ்களும் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன. பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஊழியர்களின் அவசரத் தேவைக்கான தொகையைக் கொடுப்பது தொடர்பாக, போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து தொழிற்சங்க வட்டாரங்கள் கூறுகையில், "கோடை விடுமுறையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வழக்கத்தைவிட கூடுதல் வருவாய் கிடைக்கும். இதைக் கருத்தில்கொண்டுதான் எங்களது ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளோம். முதலில் 750 கோடி ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று பிடிவாதமாக இருந்த அரசு, தற்போது 500 கோடி ரூபாயைக் கூடுதலாகத் தருவதாக உறுதியளித்துள்ளது. இது,, எங்களது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம். அமைச்சர்கள் உறுதியளித்தபடி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

பேச்சுவார்த்தையில், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய மீதமுள்ள சட்டபூர்வமான நிலுவைத் தொகையை செப்டம்பர் 2017-க்குள் வழங்கப்படும். ஊழியர்களின் சம்பளத்தில் சட்டபூர்வமாக பிடித்தம் செய்யப்படும் தொகையை, சம்பந்தப்பட்ட இனங்களில் செலுத்துவதுகுறித்து கொள்கைரீதியான முடிவெடுத்து, எந்தத் தேதியிலிருந்து அமலாக்கப்படும் என்பதை மூன்று மாதங்களில் அறிவிக்கப்படும். 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். போக்குவரத்துக் கழங்களின் நிதி நிலைமையைச் சீர்செய்வது தொடர்பாக, படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளோம்" என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive