NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீட் தேர்வு சோதனை: மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன தேர்வுமைய பரிசோதகர்

         கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காக கழட்ட சொன்ன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான விதிமுறைகளுடன் நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

மாணவ,மாணவிகள் எழுதினார்கள். சி.பி.எஸ்.சி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த தேர்வுக்காக, இந்தியா முழுவதும் 103 மையங்கள் அமைக்கப்பட்டன. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பின்வரும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன..

*பெல்ட், தொப்பி, மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், சட்டை பின், பேட்ஜ், உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது.
*அரை கை வைத்த லேசான ஆடைகளையே அணிந்திருக்க வேண்டும்.

ஆடையில் பெரிய பொத்தான்களோ, பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது. ஷூ வகை காலணிகளுக்கும் தடை.

மேற் கூறப்பட்டுள்ள விதிமுறைகள், கட்டுபாடுகள் குறித்த போதிய தகவல் கிராமப்புறத்தில் இருந்து தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்த பின்பு சட்டையை கிழித்து தேர்வு எழுத சென்ற அவலம் நேரிட்டது. அதிகப்படியான சோதனை நடவடிக்கையால் நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி ஒருவர் செய்தியாளர்களிடம், 'சோதனையின் ஒரு பகுதியாக என் உள்ளாடையை கழட்ட சொன்னது எனக்கு வேதனையளிக்கிறது' என்று தெரிவித்தார்.

இது குறித்து அந்த மாணவியின் தாயார் கூறுகையில், எனது மகள் தேர்வு மையத்திற்குள் சென்று திரும்பி வந்து தன்னுடைய உள் ஆடையை என்னிடம் கொடுத்து சென்றார் என்றார். இதேபோல் மற்றொரு பெண் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்திருந்தார். அவரது பேண்டில் உலோகத்தால் ஆன பட்டன் இருப்பதால் தேர்வறைக்குள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவரது தந்தை வெகுதூரம் சென்று தன்மகளுக்கு புதிய ஆடை வாங்கி கொடுத்து தேர்வறைக்குள் அனுப்பி வைத்தார். நீட் தேர்வின் போது இந்த கெடுபிடி காரணமாக மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் புகார் தெரவித்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.




1 Comments:

  1. Then why question paper leaked in Bihar. This and all shows irresponsible of the board

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive