Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகளும்,
டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.17-இல் (உள்ளூர் வரி தவிர்த்து) இருந்து ரூ.68.26-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.60.71-இல் இருந்து, ரூ.58.07-ஆக விலை சரிந்துள்ளது.
இதேபோல், தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.09-இல் இருந்து ரூ.65.32-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.57.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.54.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.72க்கும், டீசல் ரூ.60.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.21-க்கும், டீசல் ரூ.57.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்ததால், இந்த விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading