NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சட்டையை கிழித்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் : அலட்சியத்தால் அவதிப்பட்ட அவலம்

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில், தேர்வு நிபந்தனைகளை படிக்காமல் வந்த மாணவர் கள், சட்டையை கிழித்து விட்டு, தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர்.
நாடு முழுவதும், 103 நகரங்களில், 'நீட்' நுழைவு தேர்வுநேற்று நடந்தது.தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட, 11.35 லட்சம் பேர், இத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய இந்த தேர்வில், முறைகேடுகளை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.

அணியக்கூடாது

அதாவது, 2015ல் நடந்த, 'நீட்' தேர்வின் போது, பலர் காப்பியடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவ, மாணவியருக்கு உடை கட்டுப்பாடு மற்றும் ஆபரண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், அரைக்கை சட்டை மட்டுமே அணிந்திருக்க வேண்டும்; மாணவியர் ஆபரணங்கள் அணியக் கூடாது. 'நீட்' இணையதள நேரப்படியே, தேர்வு மையத் திற்குள் அனுமதிக்கப்படுவர்; 9:30 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

 ஜன., 31ம் தேதியே, இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஹால் டிக்கெட்டிலும், தேர்வுக்கு விண்ணப்பித்த, http://cbseneet.nic.in இணைய தளத்தி லும், இந்தக் கட்டுப்பாடுகள் குறிப்பிடப் பட்டிருந்தன. ஆனாலும், தமிழகத்தில் பெரும் பாலான மாணவர் கள், இந்த கட்டுப்பாடுகளே தெரியாமல், நேற்று தேர்வு எழுத வந்தனர்.மாணவர்கள் பலர் முழுக்கை சட்டை அணிந்திருந்த தால், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. நிலைமையை சமாளிக்க, முழுக்கை சட்டையை அரைக்கை அளவுக்கு, துண்டித்து விட்டு, தேர்வறைக்குள் சென்றனர். மாணவியர், மூக்குத்தி, காது வளையம், கொலுசு போன்ற ஆபரணங்கள் அணிந்து வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால்,தேர்வு மையத்தின் முன்,அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தனர். பெற்றோர், தங்கள் பிள்ளைகளின், பாசி, ஊசி போன்ற ஆபரணங்களுடன் வெளியே, மூன்று மணி நேரம் காத்திருந்தனர். தேர்வர்கள் பலர், 9:30 மணிக்கு மேல்,தாமதமாக வந்தனர். போக்குவரத்து பிரச்னை; தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடிய வில்லை என, பல காரணங்களை கூறி, கெஞ்சினர். ஆனாலும், தாமதமாக வந்தோர், தேர்வு மையத்திற் குள் அனுமதிக்கப்படவில்லை.

உணர்த்தவில்லை

இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:மனித உயிர்களை காப்பாற்றும் புனிதமான, மருத் துவ தொழில் படிக்க வரும் மாணவர்கள், பொறுப்பு டன் இருக்க வேண்டும். எனவே தான், தரமான, தகுதியான டாக்டர்கள் வரவேண்டும் என, மத்திய அரசு, 'நீட்' தேர்வை அமல்படுத்தி உள்ளது. தேர்வுக் கான கட்டுப்பாடுகளையேபடிக்காமல் அலட்சிய மாக இருப்போர், மருத்துவ படிப்பை முடித்து, எப்படி தரமான சிகிச்சை அளிக்க முடியும். பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்களும், மாணவர்களுக்கு, தேர்வு கட்டுப் பாடுகளை உணர்த்தவில்லை. மனப்பாட கல்விக்கே முக்கியத்துவம் என்பது போல, தேர்வுக்கான பாடத்தை மட்டும் மன ப்பாடம் செய்து விட்டு, மற்ற எதையும் தெரியா மல் வந் தோர், அவதிக்கு ஆளாகினர். தங்களுக் கான தேர்வு மையத்தையும், தேர்வு நடை பெறும் நாளான நேற்று காலையில் தான், பலர் தேடியதாக கூறுவது வேதனையாக உள்ளது. மருத்துவ படிப்புக்கான தேர்வை எழுதுவோர், முதல் நாளிலேயே தேர்வு மையத்திற்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளாதது, பொறுப்பின் மையை காட்டுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்கள் மறியல்

சேலம், மூன்று ரோடு வித்யபாரதி பள்ளியில், 'நீட்' தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டிருந் தது. இங்கு காலை, 9:30 மணி வரை மாணவர் கள் அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த பார்கவி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நிஷாந்தி, சேலம் இன்ப சேகரன் உள்ளிட்டோர், ஐந்து நிமிடம் தாமத மாக வந்தனர்.அவர்களை, தேர்வு மையத்திற் குள் அனுமதிக்கவில்லை. இதனால், மாணவர் கள் தங்கள் பெற்றோருடன், பள்ளியை முற்றுகையிட்டனர்; சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால், போக்கு வரத்து பாதிக்கப் பட்டது. தாமதமாக வந்த மாணவர்கள், இறுதி யில் தேர்வு எழுத முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive