NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to Change SR Entries?

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் / திருத்தம் செய்வது எப்படி? அரிய தகவல்கள் :

பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்வது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது.

மாணவரின் பெற்றோரால் சரியாக விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது பிரிவு 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல.

பத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் தந்தை பெயர் மற்றும் முகப்பெழுத்து திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் - W. P. NO - 25677/2010 in M. P. NO - 1 & 2 /2011, R. Yoga Priya Vs Director of School Education) சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

"Since the petitioner has already published her name change in the Govt. Gazette as stated Supra, the name is sufficient for all purposes ans everybody is bound to accept the same as the changed name of the petitioner. Hence there is no error in the order passed by the respondent i. e) Director of School education refusing top carry our the name (or) Initial Change in the Certificates in the Certificates as requested by the petitioner ".

சாதித் திருத்தம் கோரும் நிகழ்வுகளில் முதலில் தவறான சாதி குறிப்பிடப்பட்டு பின்னர் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழின் படி திருத்தம் கோரப்பட்டால் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் அவ்வாறான திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழே இறுதியானதும், ஏற்றுக்கொள்ளதக்கதும் ஆகும்.

பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் என்றால் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதர அரசு துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரி தங்கள் நியமன அலுவலர் மூலம் வருவாய் நிர்வாக அலுவலர், பேரிடர் மேலாண்மை, சேப்பாக்கம், சென்னை - 600005 மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு கருத்துக்கள் அனுப்பக்கூடாது.

உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் இருதரப்பு வாதங்களின் அடிப்படையிலான தீர்ப்பின் அசல் மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் அன்னார் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதால், அத்தகைய தீர்ப்புகள் பெறப்பட்டால் சார்ந்த மேல்முறையீட்டு மனு உடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஒருதலைப்பட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் கோரும் கருத்துக்களை பரிந்துரைக்கக்கூடாது.

வழக்குகளில் தலைமைச் செயலாளர் / கல்வித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒரு தரப்பினராக இருந்தால் (One of the Department) அவர்களை நீக்கம் செய்திட (Deletion) மனு செய்திட வேண்டும். ஏனெனில் கல்விச் சான்றுகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இதர துணைத்தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது.

பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாணவர் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயின்றவர்கள் சார்ந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் / ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர் மூலம் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மூலம் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயின்றவர் என்றால் ஆதிதிராவிட இயக்குனருக்கு அனுப்பக்கூடாது. இத்தகைய கருத்துக்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.

முற்றிலும் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் நேரிடையாக அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களது கருத்துக்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.




1 Comments:

  1. தாய் (Sc) தந்தை (0C)வெவ்வேறு சாதி
    மகள் பத்தாம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார் தந்தையின் சாதியே குறிப்பிட்டுள்ளனர்.
    தற்பொழுது தாயின் சான்றிதழைக் கொண்டு மகளுக்கும் SC சான்று பெற்றுவிட்டனர்.
    கல்விச்சான்றுகளில் திருத்தம் செய்யும் வழிமுறைகள் தெரிந்தவர்கள் வழிகாட்டவும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive