NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்திய விமானங்களில் இனி 'WIFI' சேவை!

உலக நாடுகளை தொடர்ந்து இந்திய விமானங்களிலும் wifi சேவை வழங்குவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


விமானங்களில் ஏறியவுடன் பயணிகள் காதில் விழும் முதல் ஒலி, ‘பயணிகள் அனைவரும் தங்களின் மொபைல் போனை அணைத்து வைக்க வேண்டும்’ என்பதுதான்.



அதன்பிறகு விமானம் தரையிறங்கி பயணிகள் வெளியே வரும் வரை உலகத்துடனான நமது தொடர்புகள் துண்டிக்கப்படுகிறது. மொபைல் போனை flight mode-ல் வைத்தவுடன் கால் சேவை, இணைய சேவை என அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிடும்.



உலகின் பல முன்னேறிய நாடுகளும் தங்களின் விமான சேவைகளில் WIFI வசதிகளை வழங்கிவருகிறது.


இந்தியர்களுக்கு இது எட்டாக்கனியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு முதல் பெரும்பாலான விமானங்களில் WIFI கருவிகளை பொருத்தி இணைய சேவை வழங்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.


இதன் மூலம் மொபைல் போன்களில் உள்ள அனைத்து ஆன்லைன் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி தகவல்களை பறிமாறிக்கொள்ளலாம்.


 ஆன்லைன் அப்ளிகேஷன்களில் உள்ள voice call வசதிகளை பயன்படுத்தி நம் அன்பானவர்களுடன் உறையாடிக்கொண்டே விமானத்தில் பறக்கலாம்.



இதற்கான அறிவிப்பை ஏற்கனவே விமானநிறுவனக்கள் வெளியிட்டிருந்த நிலையில்,தொலைத்தொடர்புத் துறையின் அனுமதிக்காக காத்திருந்தது.


இந்நிலையில், இதற்கான அனுமதி கூடிய விரைவில் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதையடுத்து, வரும் ஆகஸ்டு மாதம் முதல் இந்திய விமானங்களில் வைஃபை வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



*விமானத்தில் WIFI எப்படி சாத்தியம்?*

1.) விமானக்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் WIFI கருவிகள் விமானத்தில் பொருத்தப்படும்.


2.)WIFI கருவியானது விமானத்தின் மேல் பொருத்தப்படும் ஆண்டனா மூலம் அருகில் உள்ள சேட்டிலைட்டுடன் தொடர்பை ஏற்படுத்தும்.


3.) விமானங்கள் பறக்கும்போதே அருகில் உள்ள சேட்டிலைட்டுகளுடன் தொடர்புகளை தானாகவே மாற்றிக்கொள்ளும்.


4.) சேட்டிலைட்டானது பூமியில் உள்ள டவர்கள்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்ளும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive