NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜிப்மர் நுழைவுத்தேர்வு 1.49 லட்சம் பேர் பங்கேற்பு


நாடு முழுவதும் உள்ள 75 நகரங்களில் இருவேளையாக நடைபெற்ற ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வ 1.49 லட்சம் பேர் எழுதினர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள், அதன் காரைக்கால் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. 2017-18ம் கல்வி ஆண்டுக்கான நுழைவு தேர்வு ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதன்படி, நேற்று 75 நகரங்களில் உள்ள 339 மையங்களில் நேற்று இரு பிரிவாக நுழைவுத்தேர்வு நடந்தது. புதுச்சேரியில் 6 மையங்களிலும், தமிழ்நாட்டில் 19 மையங்களிலும் தேர்வு நடந்தது.
காலை 10 மணி முதல் 12.30 மணி வரை முதல் பிரிவும், மதியம் 3 மணி முதல் 5.30 மணி வரை 2வது பிரிவு தேர்வும் நடந்தது. இருவேளையாக நடைபெற்ற தேர்வில் மொத்தம் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 369 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive