NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசனம் செய்வோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்: ஜூன் 21 இன்று உலக யோகா தினம்...

ஐ.நா., அங்கீகாரம் இப்போது தமிழகம்மட்டுமின்றி, உலகம் முழுவதும் யோகாவை விழிப்புடனும், மகிழ்ச்சியுடனும், ஆழ்ந்தசிந்தனையுடனும் நம் முன்னோர்கள் செய்து வந்த யோகாசனம், உடற்கூறு விஞ்ஞான கலை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.உலகத்தில் மனிதனாக பிறந்த அனைவருமே ஜாதி, மதம், மொழி, இனம் கடந்த இனிய மார்க்கமாகவே யோகாசனத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐ.நா.சபையே ஜூன் 21ஐ உலக யோகா தினமாக கொண்டாடவும் கட்டாயம் மனித குலத்திற்கே மருந்தில்லா மருத்துவ பயிற்சி யோகாசனமே என்பதை பறைசாற்றியுள்ளது.
🦋நம்மை அறியாமலே பயன்
நம் முன்னோர்கள் முழுமையாக செயல்திறன் மிக்கவர்கள். இதை தான் யோ கர்மஸீ கெளலசம் (பகவத்கீதை) - செயலில் திறமையே யோகம் - என்கிறது. உடல் ஆரோக்கியமாக, வலிமையாக இருந்தால் மனதிடம் அதிகமாகும். மனதிடம்அதிகமானல் செயல்திறன் கூடும். உடல், மனம், எண்ணம் ஒருங் கிணைந்து செயல்பட்டால் நாம் ஒழுக்க சீலராக வாழ்வோம். நம் திறமை மேம்பட்டு நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும். இதுவே உன்னதமான வாழ்வாக அமையும். நம்மை அறியாமலே இது அனைத்தையும் யோகாசனப் பயிற்சி மூலம் நமக்கு கிடைக்கும்.
🦋வெற்றிக்கு வழி
யோகாசனத்தின் முழுபலன் நோயற்ற தன்மை, நோய்களை போக்கும் தன்மை, மனதை அடக்கி ஆளும் தன்மை ஒருங்கே அமையப்பெற்றது. இதை தான் ஒருங்கிணைத்தல் என்று சொல்வர். இதையே யோகா, யோக், யோகம் என்றெல்லாம் கூறுகிறோம். ஆசனம் என்பது இருக்கை நிலைகள்.
ஆசனத்தில் அமர்ந்து மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்துவதால் யோகாசனம் என்று கூறுகிறோம். மிகவும் எளிதான பயிற்சிகள் உண்டு. யோகாசனம் செய்தால் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தன்மை கூடுகிறது. நரம்பு மண்டலம் புத்துணவு பெறுகிறது. தசைநார்கள் உறுதியடைந்து ரத்த நாளங்களின் செயல்திறனை கூட்டுகிறது. நாள்முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மனம், உடல் வலிமை பெறும். வேறென்ன வேண்டும் நமக்கு. உழைக்க உடம்பும், மன உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive