NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு நியமனத்தில் ஊனத்தின் அளவு : மாற்றுத்திறனாளிகள் போர்க்கொடி

அரசுப் பணிகள் நியமனத்தில், விதிக்கப்பட்ட ஊனத்தின் அளவு குறிப்பிடும் உத்தரவை ரத்து செய்ய, மாற்றுத்திறனாளிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க பொதுச்செயலர் நம்புராஜன் கூறியதாவது: நாடு முழுவதும், மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டம், கடந்த ஏப்ரல், 1ல், அமலுக்கு வந்துவிட்டது. அதன்படி,

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிக்கு, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அத்துடன், 40 - 70 சதவீத ஊனமுற்றோர் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என்ற விதி இருக்கக்கூடாது எனக்கூறி, சங்கத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் எதிரொலியாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவிட்டதோடு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நீதிமன்றத்திலும் உறுதியளித்தது. 
ஆனால், ஊனத்தின் அளவு பதிவதை கைவிடுவது குறித்த முடிவை தெரிவிக்கவில்லை. ஊனத்தின் அளவை குறிப்பிட்ட உத்தரவை ஏற்க முடியாது என, நீதிமன்றமே தெரிவித்தும், வாரியம் ஏற்க மறுத்து கால அவகாசம் கோரியதால், வழக்கு வரும், 16க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தரவை ரத்து செய்யும் வரை, அரசுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். 
இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive