NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு தடை கேட்டு வழக்கு

       நெல்லை அண்ணா பல்கலைக்கழக சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்க தலைவர் எஸ்.முகம்மது ஜலீல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு தொழில் கல்விகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இந்த இடங்களில் ஒற்றை சாளர முறையின்படி நிரப்பப்படுகிறது.

சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்கள் பெரும்பகுதி இடங்களை அரசிடம் கலந்தாய்வுக்காக ஒப்படைக்கின்றன. ஆனால் கலந்தாய்வு முடிந்து நிரப்பப்படாத இடங்கள் கடைசி நேரத்தில் அந்த கல்லூரிகளுக்கு திருப்பி ஒப்படைக்கப்படுவதால், அவற்றை கல்லூரி நிர்வாகத்தாலும் நிரப்ப முடிவதில்லை.  இதனால் தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. வருவாய் குறைவதால், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இந்தாண்டு மட்டும் 22 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூட விண்ணப்பித்து உள்ளன.
நடப்பு கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ள கலந்தாய்வில் ஒரு லட்சத்துக்கும் மேலான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், தங்களது கல்லூரிகளில் உள்ள இடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அல்லது சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களின், அரசுக்கு வழங்கும் இடங்களின் சதவீதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
இதுகுறித்து தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு 7–ந்தேதி கோரிக்கை மனு அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என்ஜினீயரிங் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை 27–ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive