Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

IIT Entrance Result Published

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது 

ஐஐடி.,க்களில் சேர்வதற்கான JEE ADVANCED நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளில் மிகக்கடினமான தேர்வு என இதை குறிப்பிடுவர்.
இன்று வெளியிடப்பட்டுள்ள இந்தத் தேர்வு முடிவுகளில், அகில இந்திய அளவில் சண்டிகரைச் சேர்ந்த சர்வேஷ் மேத்தானி என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். புனேவைச் சேர்ந்த அக்ஷத் சுக் என்ற மாணவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த அனன்யே அகர்வால் என்ற மாணவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முதல் இடம் பிடித்த சர்வேஷ் மேத்தானி, 366 மதிப்பெண்களுக்கு 339 மதிப்பெண்கள் பெற்றார். கடந்த மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற இந்த நுழைவுத்தேர்வில் 1.70 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

 

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading