Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 22.6.2017

மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
மிதுனம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
கடகம்
திட்டமிட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
சிம்மம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கன்னி
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
துலாம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
விருச்சிகம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
தனுசு
கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
மகரம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கும்பம்
வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். நண்பர்கள் உதவுவார்கள். தொழிலில் லாபம் வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
மீனம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வரும்-. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive