NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

110 விதியின்படி TNTET லிருந்து முழு விலக்கு வேண்டும் நிபந்தனை ஆசிரியர்கள் - சட்ட மன்ற கூட்டத்தில் எதிர்பார்ப்பு.

110 விதியின்படி TNTET லிருந்து முழு விலக்கு வேண்டும் நிபந்தனை ஆசிரியர்கள் - சட்ட மன்ற கூட்டத்தில் எதிர்பார்ப்பு.

தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறியாவதைத் தடுக்க பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் உதவினாலும் TNTET கடைசி வாய்ப்பு எனகடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த கல்வித் துறையின் சுற்றறிக்கையால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பணியும், வாழ்க்கையும் கேள்விக்குறியாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பல வழிகளில் மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவரது மேலான கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 23/08/2010 ற்குப் பிறகு பணிநியமனம் பெற்றவர்கள் நிலை இது.


மிக மனம் வருந்தும் நிலை இதில் யாதெனில் ஆறு  வருடங்களுக்கு மேலாக பணியில் ஜொலித்த இவர்கள் தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரை குத்தப்பட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப் படுவார்கள் என்ற அறிவிப்பு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதே!


23/08/2010 க்குப் பிறகு (தெரிந்தோ தெரியாமலோ முழு தகுதி இருந்தும்) பணியில் சேர்ந்த ஒரே காரணத்தினால் இவர்கள் தகுதியற்றவர்கள் என எப்படி வரும் காலம் நிரூபிக்க உள்ளது என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.


இவர்களில்
பணியில் சேர்ந்த நாள்முதல்  இன்று வரை மாணாக்கர்களின் படிப்பு,
நலன்,  அக்கறை,  முன்னேற்றம்,  தேர்ச்சி, ஒழுக்கம்,  அணுகுமுறை.... போன்றவைகளில் எத்தனை ஆசிரியர்கள் மீது தவறு குற்றம் கண்டறியப்பட்டுள்ளது?


"அ முதல் ஃ வரை...!
கற்பித்தலுடன் சேர்த்து
அரசு அவ்வப்போது கொடுக்கும் பணியிடைப் பயிற்சிகள் முலம் மாணாக்கர்களுக்கு தேவையானவற்றை மிகுந்த உற்சாகத்துடனும் சுணக்கம் இன்றியும் போதிக்கவில்லை" என நிரூபிக்க யாரால் இயலும்?




கல்வி மற்றும் பள்ளி சார்ந்த  அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து தேர்ச்சி சதவீதமும் உயர்த்தி கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாக பணியில் உள்ள இந்த ஆசிரியர்கள் கடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை காரணம் காட்டி தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரை குத்தி வெளியேற்றிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என யோசிக்கவும், மன சங்கட சூழலையும் இன்று வரை காது கொடுத்து கேட்க யாரும் இல்லை.

கடந்த 3 ½ ஆண்டுகளிலா பலசட்ட சிக்கல்கள் விளைவாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை. 

கடந்த மாதம் நிறைவுற்ற TNTETல் முழுவதும் பயின்று வெற்றி பெற சாத்தியமான சூழலும், தெளிவான மனநிலையும் மங்கிய நிலைக்கு அதற்கு முன்பு கல்வி துறை இயக்குனர் செயல்முறைகளின் படி கட்டாயத் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற சுற்றறிக்கை மேலும் காயப்படுத்தியுள்ளது.


இந்த ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு காரணமாக TNTET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு கோரிக்கைகளை அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் வாயிலாக வைத்து வந்த நிலையில் 3/10 வாய்ப்புகள் மட்டுமே கொடுத்து விட்டு தற்போது வரும் TNTET கடைசி வாய்ப்பு என்ற கட்டாயத்தால்  கழுத்தில் கத்தி உள்ளது போல தினம் தினம் இறுக்கமான சூழலில்    மிகவும் வேதனையில்  அரசு பொதுத் தேர்வுகள் , விடைத்தாள் திருத்தம், தேர்தல் பணி இவற்றையும் சேர்த்து  பள்ளிக் கல்விப் பணியும் புரிந்து வந்தனர்.


இவர்களின் நிலை பற்றிய செய்திகள் அவ்வப்போது தொலைக்காட்சி, செய்தித்தாள், மின் ஊடகங்கள் வழியாக வந்தாலும் அதை அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகளின் கவனத்தில் கொண்டு செல்லவும், எவரும் கண்டுகொள்வதும் இல்லை என்பதுடன், ஆறுதல் கூறக் கூட ஆட்கள் இல்லை என்பது இவர்களின சொல்ல இயலாத துயரம்.


இவ்வளவு காலம் பட்டதாரி ஆசிரியர்களாக சிறப்பாக பணி புரிந்தும் முறையான அங்கீகாரம் இல்லாதது போல இன்று வரை பயணிக்கும் இந்த ஆசிரியர்கள் பல வழிகளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு உதவ பல அரசு உதவி  பள்ளி  நிர்வாகங்கள் முன் வருவது இல்லை.


TNTET நிபந்தனை ஆசிரியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரம், பணிப் பாதுகாப்பு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து ஏற்கெனவே  சிறுபான்மையினர் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல இவர்களுக்கும் விலக்கு அளித்து, ஒரு நல்ல முடிவினை தற்போது தமிழக அரசு எடுக்கும் பட்சத்தில் அரசிற்கு முழுவதும் நன்றிக்கடன் பற்று இருப்பார்கள் என்பது உண்மை.


இந்த பட்டதாரி ஆசிரியர்கள் நிலையை நல்உள்ளத்துடன் பார்க்க முற்பட்டு விரைவில் தீர்வு கண்டால் இனிவரும் நாட்களிலாவது நிம்மதியுடன் ஆசிரியப் பணியை அறப்பணியாக மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.

ஆகவே நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்திலேயே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட அனைவருக்கும் TNTET லிருந்து முழுமையான விலக்கு அறிவித்து நல்ல முடிவைத் தர வேண்டும் என தமிழக TET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.




1 Comments:

  1. பணியில் இருக்கும் ஒருவருக்கு பணி இனி இல்லை என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத சோகத்தை ஏற்படுத்தும்.....கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்வி அமைச்சர் மனது வைத்தால் இவர்களுக்கு மட்டுமல்ல 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வெயிட்டேஜால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் வாழ்வு கொடுக்கலாம்...மாண்புமிகு முதல்வரும்...மாண்புமிகு கல்வி அமைச்சரும்.....மனது வைக்க வேண்டுகிறேன்.....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive