NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2020 க்குள் வருகிறான் குளோனிங் மனிதன்.?

        குளோனிங் என்­ற­வுடன் உங்கள் நினை­வுக்கு வரு­வது என்ன? ஜுராசிக் பார்க் தொடங்கி நிறைய ஹொலிவூட் படங்கள் மற்றும் டாலி என்­ற­ழைக்­கப்­படும் செம்­மறி ஆடு,
சரியா? குளோனிங் பற்­றிய ஆராய்ச்­சிகள் உலக அரங்கில் பெரிய அளவில் இன்றும் தொடர்ந்துக் கொண்­டேதான் இருக்­கின்­றன. டாலி தவிர காப்­பிகேட் என்­ற­ழைக்­கப்­படும் பூனை, டியூவி என்­ற­ழைக்­கப்­படும் மான், ஸ்நூபி என்­ற­ழைக்­கப்­படும் நாய் உள்­ளிட்ட பல்­வேறு மிரு­கங்­களை இது­வரை குளோனிங் முறையில் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்கள் விஞ்­ஞா­னிகள்.


எப்­படி செய்­கி­றார்கள் குளோனிங்? கல­வி­யில்லா இனப்­பெ­ருக்கம் (Asexual Reproduction) குறித்து விலங்­கியல் பாடத்தில் நாம் நிறை­யவே படித்­தி­ருப்போம். இதுதான் குளோனிங் முறைக்கு அடிப்­படை. பொது­வாக குளோனிங் மூன்று வகையில் செய்­யப்­ப­டு­கி­றது. ஜீன் குளோனிங் (Gene Cloning), இனப்­பெ­ருக்க குளோனிங் (Reproductive Cloning) மற்றும் சிகிச்­சை­முறை குளோனிங் (Therapeutic Cloning). இதில் ஜீன் குளோனிங் என்­பது வெறும் ஜீன்­க­ளையும், DNA கூறு­க­ளையும் பிரதி எடுப்­பது. இனப்­பெ­ருக்க குளோனிங் என்­பது ஒரு முழு மிரு­கத்தை அப்­ப­டியே பிரதி எடுப்­பது. சிகிச்­சை­முறை குளோனிங் என்­பது பல்­வேறு நாடு­களில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மருத்­துவ சிகிச்­சை­முறை. குளோனிங் என்­பது ஏதோ ஏற­மு­டி­யாத மலை­ய­ளவு விஞ்­ஞான கோட்­பா­டு­களைக் கொண்­டது என்­றெல்லாம் எண்ணத் தேவை­யில்லை. அடிப்­படை அறி­வி­யலில் அதன் எளி­மை­யான விளக்கம் இதுதான்! இனப்­பெ­ருக்­கத்­திற்­காக குளோனிங் செய்­யப்­ப­ட­வேண்­டிய மிரு­கத்­தி­லி­ருந்து இரண்டு செல்கள் எடுப்­பார்கள். ஒன்று முதிர்ந்த சீமாடிக் உயி­ரணு (Matured Somatic Cell) மற்­றொன்று DNA கூறுகள் நீக்­கப்­பட்ட முட்டை செல் (DNA removed Egg Cell). இதில் சீமாடிக் உயி­ர­ணுவில் இருக்கும் DNA கூறு­களை முட்டை செல்­லுக்குள் செலுத்தி மர­பணு ஒத்த தாய் மிருகம் ஒன்­றினுள் உட்­பொ­ருத்­தி­வி­டு­வார்கள். அது உரு­வாக்கும் குட்டி, இரண்டு செல்­களைத் தான­ம­ளித்த மிரு­கத்தைப் போன்றே இருக்கும். குளோனிங் மனி­தர்கள் எப்­போதுவரு­வார்கள்? சரி, இந்த குளோனிங் ஆராய்ச்­சியின் உச்­ச­மான மனி­தர்­களைக் குளோனிங் செய்­வது சாத்­தி­யமா? முன்பு கணித்­ததை விட இப்­போது அந்த அசாத்­திய மைல்கல் எட்­டி­விடும் தூரத்­தில்தான் இருப்­ப­தாகக் கூறி ஆச்­சர்­யத்தில் ஆழ்த்­து­கி­றார்கள் அறி­வி­ய­லா­ளர்கள். தற்­போது சிகிச்­சை­முறை குளோனிங் எனப்­படும் Therapeutic Cloning கொண்டு மர­பணு நோய்கள், வய­தானால் வரும் தீவிர பிரச்சி­னைகள் போன்­ற­வற்றை சரி செய்­கி­றார்கள். இந்­தாண்டின் தொடக்­கத்தில் ஜப்­பானில் ஒரு பெண்­ம­ணிக்கு வய­தா­ன­வர்­க­ளுக்கு ஏற்­படும் கண்­தசை சீர்­கேடு (Macular Degeneration எனும் பார்வை குறை­பாடு) வந்­த­போது அவரின் தோல் செல்கள் கொண்டே Therapeutic Cloning முறையில் விழித்­தி­ரையை சரி செய்­தி­ருக்­கி­றார்கள். ‘குளோ­னிங்­பாக்ட்ரி’ என்­ற­ழைக்­கப்­படும் சீனாவின் போயாலைஃப் (BoyaLife) என்ற நிறு­வனம் தற்­போது வீடு­சார்ந்த விலங்­குகள் மட்­டு­மல்­லாது பந்­தயக் குதி­ரைகள், மோப்ப நாய்கள் என விலங்­கு­க­ளையும் தயா­ரிக்கும் முயற்­சியில் உள்­ளது. இதே முக்­கி­யத்­துவம் உலகம் முழு­வதும் குளோனிங் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளுக்கு இருக்­கும்­பட்­சத்தில் 2020ஆம் ஆண்­டுக்குள் 'குளோனிங் மனிதன்' நிச்­சயம் சாத்­தியம் என அடித்து சொல்­கி­றார்கள் அறி­வி­ய­லா­ளர்கள். இது சாத்­தியம் என்றால் மலட்­டுத்­தன்மை, குழந்­தை­யின்மை போன்ற குறை­களை முழு­வ­து­மாக இல்­லாமல் செய்து விட முடியும். அப்­படி செய்­து­விட்டால் ஒரு குழந்தைக்கு ஒன்றிலிருந்து மூன்று பெற்றோர்கள் வரை இருக்கும் நிலை ஏற்படலாம். இது நாம் வாழும் வாழ்க்கை முறையையே மாற்றிவிடக்கூடும்! அதனால் இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி குளோனிங் மனிதன் சாத்தியமா என்பதல்ல, அவனை உருவாக்கலாமா, வேண்டாமா என்பதே! .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive