NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்பு

        ராமநாதபுரத்தில் கலாம் படித்த பள்ளியில், 'அக்னி சிறகுகள் பயணம்' என்ற மலையாள ஆவண படப்பிடிப்பு நடந்தது.        மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில், 1946--1950 வரை உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்தார். இதை நினைவு கூரும் வகையில், அவர் ஜனாதிபதியாக இருந்த போது, இரண்டு முறை பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை கவுரவித்தார்.கலாம் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி திறந்தார். இதையடுத்து, கலாம் குறித்த சிந்தனை, அவரது லட்சியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.அவர் படித்த பள்ளியில், கடந்த வாரம் 'சலாம் டூ கலாம்' என்ற குறும்படப்பிடிப்பு நடந்தது. இந்த நிலையில், நேற்று 'அக்னி சிறகுகள் பயணம்' என்ற பெயரில் மலையாள ஆவண படப்பிடிப்பு நடந்தது.இதுகுறித்து, பிச்சைக்காரர் வேடமணிந்து நடித்துக்கொண்டிருந்த இயக்குனர் உமர் அபு கூறுகையில், ''கேரளாவில் படிக்கும் மாணவி ஒருவர் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை படித்த போது, அவரது நினைவிடம், படித்த பள்ளிக்கு வர விரும்புகிறார்.
தனது மாஸ்டருடன் இங்கு வருகிறார். அதே நேரம் தெருவோரம் பிச்சை எடுப்பவருக்கும், இந்த ஆசை வந்தது. அவரும், இங்கு வந்து அவர் எந்த வகுப்பறையில் படித்தார், என தேடுவது போல் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கலாம் குறித்த அறிவு சிந்தனையை மக்களிடம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive