NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியன் ரெயில்வே வழங்கும் உணவு மனிதர்கள் உண்பதற்கு தகுதியானது கிடையாது - சிஏஜி அறிக்கை


ரெயில் பயணிகளுக்கு இந்தியன் ரெயில்வே வழக்கும் உணவு மனிதர்கள்
உண்பதற்கு தகுதியானது கிடையாது என தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. இந்தியன் ரெயில்வேயின் கேட்ரிங் சர்வீஸ் நிர்வாகத்தில் பல ஓட்டைகள் இருப்பதை சிஏஜி அறிக்கை குறிப்பிட்டு காட்டிஉள்ளது. கேட்ரிங் சர்வீஸில் இந்தியன் ரெயில்வேயின் மோசமான நிர்வாகத்தை சுட்டிக்காட்டி உள்ள சிஏஜி, தரமற்ற உணவு மற்றும் ஏகபோகமயமாதல் ஆகியவை தரத்தில் சமரசத்திற்கு வழிவகை செய்து உள்ளது என கூறிஉள்ளது.

* தணிக்கை குழு இணைந்து நடத்திய ஆய்வில் சுகாதாரம் தொடர்பானவற்றில் திறமையின்மை மற்றும் மோசடிகள் வெளிப்பட்டு உள்ளது. ரெயில்வேயின் 75 சதவித பயணிகள் உணவுகள் சுகாதாரம் மற்றும் சுத்தம் என்பது சராசரி மற்றும் மோசமானது என்ற் நிலை என்பதையே உணர்கிறார்கள்.

* ரெயில்வே நிலையங்கள் மற்றும் ரெயில்களில்  வழங்கப்படும் உணவுப் பண்டங்களானது மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றது என்ற அதிர்ச்சிகரமான தகவலை சிஏஜி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

* சிஏஜி குழு ஆய்வு செய்ததில் ரெயில் நிலையங்களில் வழங்கப்படும் பழ ஜூஸ், பிஸ்கட்ஸ் மற்றும் பல்வேறு பால் குளிர்பானங்கள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றது என தெரியவந்து உள்ளது.

* அசுத்தமான உணவு பொருட்கள், மறுசுழற்சி உணவுப் பொருட்கள், காலாவதியான பேக்கேஜ் உணவுப்பொருட்கள் மற்றும் பாட்டில்கள், அங்கீகாரம்பெறாத குடிநீர் பாட்டில்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது மற்றும் இவைகளை ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என சிஏஜி தெரிவித்து உள்ளது.

* 11 ரெயில்வே மண்டலங்களில் 21 ரெயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடையாது. காப்பி, டீ மற்றும் சூப் போன்றவை தயாரிப்புக்கு மோசமான தண்ணீர் 22 ரெயில்களில் பயன்படுத்தப்படுகிறது.

* உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது கிடையாது. பொதுவான ரெயில்வே தண்ணீரே சில ரெயில்களில் உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. 13 ரெயில்வே மண்டலங்களில் 32 ரெயில் நிலையங்களில் சமையல் அறையில் கை உறை மற்றும் தலை கவசம் அணிவது கிடையாது.

* ஆய்வின் போது உணவுப்பொருட்கள் மோசமாக உள்ளது, பூச்சிக்கள் பறந்ததும் காணப்பட்டு உள்ளது. மூன்று ரெயில் நிலையங்களில் இதுபோன்ற பூச்சிகளிடம் இருந்து உணவை பாதுகாக்க மூடி வைக்கப்படுவது கிடையாது, தூசி காணப்படுகிறது. துரந்தோ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் சரக்குகள் வைக்கப்படும் அறைகளில் எலிக்கள், கரப்பாண்பூச்சிகள் உள்ளது.

* லக்னோ - ஆனந்த் விகார் டுபுள் டக்கர் ரெயிலில் பயணி ஒருவர் கட்லெட்டிற்கு ஆர்டர் கொடுத்து உள்ளார், அவருக்கு இரும்பு ஆணியுடன் கொடுக்கப்பட்டு உள்ளது.

* கான்பூர்-டெல்லி எக்ஸ்பிரஸ் உட்பட ரெயில்களில் சமையல் அறையில் விற்பனை ஆகாத புரோட்டாக்கள் மறுசுழச்சி செய்யப்படுகிறது. புரோட்டக்கள் மோசமான உணவுகள் மறுசுழச்சி செய்யப்படவில்லை என்பதை ஆய்வு செய்ய இயந்திர பரிசோதனை கிடையாது.

* புகார்களை சரிசெய்யும் அமைப்பானது செயல் இழந்து காணப்படுகிறது. புகார்களின் எண்ணிக்கையும் குறையவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகமான புகார்கள் கேட்ரிங் சர்வீஸ் குறித்தே வருகிறது. ரெயில்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை மற்றும் தரமற்ற உணவுகள் குறித்தே வந்து உள்ளது என சிஏஜி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive