NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி ஆசிரியர்களின் மாபெரும் மாநில அளவிலான ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்

BEd கணினி அறிவியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம்,

Reg.No:127/2016
நமது சங்கத்தின் சார்பில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநில அளவிலான ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் 09.07.2017ல் தஞ்சை C.E.O  ஆபிஸ் அருகில் நடைபெற்றது.
கோரிக்கைகள்:
1.கணினி அறிவியல் பாடத்தை அறிவியலில் ஒரு பகுதியாக அறிவித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்!!!
2. அறிவியல் ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வண்ணத்தில் கணினி அறிவியலை 6 வது பாடமாக அறிவித்து தனியாக கணினி பாட புத்தகம் வெளியிட்டு அப்பாடங்களை நடத்த பி.எட் முடித்த கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!!!
3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக  பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என்ற விகிதத்தில் கணினி ஆசிரியர் பணியிடத்தை புதிதாக உருவாக்கி பணி நியமனம் செய்ய வேண்டும் !!!
4.மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்!!!
5. அரசு பள்ளிகளில் கொண்டு வரப்பட உள்ள Boot System- ஐ கைவிட வேண்டும்!!!
போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன  மாநிலத் தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார் தஞ்சை மாவட்ட தலைவர் நவீன் மற்றும் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் வரவேற்புரையும் மாநில துணைத்தலைவர் குழந்தைவேல் மற்றும் மாநில நெட்வொர்க் அட்மின் பாலசுப்ரமணியன்,மாநில ஒருங்கிணைப்பாளர் சாலை கலையரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள்
தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர்
*திரு.முனைவர். சாமி.சத்தியமூர்த்தி*
அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி
உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்கள். தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இவண்
ச.பாலசுப்ரமணியன்
மாநில நெட்வொர்க் அட்மின்
செல்:8428184441
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம்
தமிழ்நாடு
பதிவு.எண்:127/2016







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive